உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

லதனை

53

மறுப்பினை மறுக்கு முறையா லதனை யெழுதினவரது நூற்பொருளறிவு முழுவ தூஉம் வழுவிய மயக்க வறிவேயாமென்ப தினிது விளக்கினாம்.இனியவரெழுதிய சொற்றொடர்கள் மேலே காட்டிய பத்து வகைக் குற்றங்களுஞ் செறிந்து சொற்றொறும் பிழை பட்டமையால் அவற்றை யாராய்தல் “மணற்சோற்றிற் கல்லாய்தல்போற்" பயனின்றாய் முடியு மென்பது பற்றி யவற்றை விடுத்தாம்.

என்றித்துணையுங்

கூறியவாற்றால்

நூலாராய்வா ரிலக்கணங் கூறி நிறுவு முகத்தான் நூலாராய்தற் குரிமையுடைய ரல்லாதார் பொறாமையானும் புகழ் நோக்கத்தானும் பகைமை யுணர்வானு மூவேறு வகைப்படுவ ரென்பது புகுத்தி விரித்து அப்பொருண் முடிவின்கண் உண்மையான் நூலாராய்ச்சி செய்ய விரும்புவா ரினையராதல் வேண்டுமென்பதூஉம், ஈண்டைக் குதவியாதற் பொருட்டெடுத்துக் டுத்துக் கொண்ட பொருளிலக்கணமாவ திதுவென்பதூஉம், அப்பொருட் கூறுபாடாகிய அகம்புற மென்னும் ஒழுக்கங்களினியல் பிவையா மென்பதூஉம், சோமசுந்தரக்காஞ்சி அறிவன் றேயமுந் தாபதப் பக்கமுமெனக் கூறுபடுக்கப் படுங் காஞ்சித்திணைப் பகுதி யிரண்டனு ளெதன்பாற் படுவதா மெனக் கடாவுவாருரை வழுவுரையாதல் காட்டு முகத்தாற் காஞ்சித்திணையைத் தொல்லாசிரிய ருரைவழக்கோடும் புலனெறி வழக்கோடும் பொருந்துமாறெல்லாந் தந்துவிளக்கிப் பகுத்துக் கொண்ட முக்கூற்றுள் உலகநிலையாமை மாத்திரையே கொண்டு வரும் பொருடழுவி மற்றது வந்ததா மென்பதூஉம் ‘கையறுநிலை'யு மவ்வாறே முக்கூறுபடுதலி னக்கூறு மூன்ற னுண் மற்றிக் கையறு நிலை ஆண்பாற்பொருள் கொண்டு வந்த தென்பதூஉம், கையறு நி லயை யங்ஙனம் பொருட்டிறம் பற்றி மூன்றாக வகுத்தடக்குமா றறியாது கூறுவாருரை தொல்லாசிரியர் செம்பொருணூால் பலவற்றோடு முரணி வழூஉப் படுங் குழறுபாட்டுரையா மென்பதூஉம், தாபதநிலை யென்பது தவ நெறிக்கமைந்த வெண்வகை யுறுப்பொடு தழீஇப் பெண்பாற் கூற்றாகவே வருமென உறுதி கொண்டுரைப் பார்க்கு அவ்வுறுதியின்றி வரூஉம் புறநானூற்றுச் செய்யுளும் பிறவும் அடங்காமையின் அவற்றிற் கேற்பவைத்து அதனை யிருகூறு படுத்தி யிலக்கண முரைத்து இவற்றுளொரு கூற்றின்கட் 'சோமசுந்தரக்காஞ்சி' யிற் போந்த தாபதநிலையை யடக்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/86&oldid=1587193" இலிருந்து மீள்விக்கப்பட்டது