உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

❖ - 21❖ மறைமலையம் – 21

"செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு, மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசையுகரம்” என்னும் சூத்திரத்தால் உகரம் மெய்யொடுங்கெட்டு ‘அறிம்' என நின்றவாறறியாமலும் நன்னூல் லிருத்தியுரைகாரர் காட்டிய "முதுமறை யந்தணிர் முன்னியதுரைமோ” என்னும் எடுத்துக்காட்டுத்தானும் பார்த்த றியாமலும் “துண்ணென விவ்வுலகம் முதலென்று சுருங்குத லறிமென்றோ” என்னும் அவ்வாக்கியம் “விரிந்து காரியப்பட்ட இவ்வுலகங் கதுமென மறைந்து முதற்பொருண் மாயையாகச் சுருங்குதலை உலகீர்! நீவிரறிந்து கொள்ளுதி ரென்பதனைக் காட்டுதற்கோ” என்று செவ்வனே பொருள்படுதறானு மாராயாது நுமக்கு வேண்டியவாறே அவ் ‘அறிம்' என்பது தன்மைப் பன்மையெனவும் அஃதீற்றயல் கெடுதற்கு விதியின் றெனவுங் கூறியது குழறுபடையா மென்றும், “முந்தியமோனை முதலாமுழுது மொவ்வா துவிட்டாற், செந்தொடைநாமம் பெறுநறு மென்குழற்றே மொழியே” என்னும் விதிதழீ இச்செந்தொடையாக நின்ற சொற்றொடரியலுணராது மோனை யின்றென விகழுதல் சாலதா மென்றுமறிந்து கொள்ளக் கடவிர். இனி “இன்றென்னோ" என நின்றதைச் சிற்றறிவினரும் அச்சுப் பிழையாமென அறிந்து கொள்ளா நிற்பவும் இதுதானு முணராப் பருப்பொரு ளறிவினிராகிய நீர் ஒரு நூற்குக் குற்றங்கூறப் புகுதல் எல்லாரானும் எள்ளப்படுதற் கேதுவா மென் றொழிக. வழக்கிடுவா ரெதிர்முகமாக விருந்து வழக்கு நிகழ்த்துங்காற் சொல்லப்படுந் தோல்வி

.

நிலையினியல்பறியாது, நுமக்குத் தோன்றியவாறெல்லாம் இயைபில்லா விடங்களி னெல்லா மதனை வழங்கி ழுக்குறுகின்றீர். அளவை நூலேனும் வரலாற்று முறையாற் பயின்றிருந் தீராயின் இங்ஙனங் குழறுவீரல்லீர். பிறரை மயங்கப் படுத்தற் பொருட்டுச் சொல்லாரவாரஞ் செய்யும் நும்புரை யறிவின் பெற்றியுணர்ந்து அறிவுடையோர் நகையாடுவ ரென்க.

இனிச் சோமசுந்தரக்காஞ்சியின் மேலெழுந்த மறுப் பிற்குமேல் எதிர்மறுப்பாக வெழுந்த இஃது அப்போலி மறுப்பின் கட் சொல்லப்பட்ட குற்றங்கண் முழுமையும் பரிகரித்து அக்காஞ்சியினைத் தொல்லாசிரியர் இலக் கண நூலிலக்கியநூ லளவைநூன் மெய்ப்பொருணூன் முதலிய வற்றொடுபடுத்து ஆக்கிக்கொண்டமையிற் சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வாறு அப்போலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/85&oldid=1587192" இலிருந்து மீள்விக்கப்பட்டது