உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

51

தொகுத்துப் பரிகரித்திடுவாம். ஆற்றாமை தோன்றக் கூறுவன வெல்லாங் ‘கையறுநிலை' யாவான் செல்லு மென்பது மேலே விளக்கினா மாகலிற் “சைவ மெனப்படு சமயநலுண்மை” என்னுஞ் செய்யுளி லாற்றாமை தோன்றவில்லை யெனக் கூறு நீர் அப்பொரு ணுட்ப மறிதற் குரியிரல்லீ ராகலாற் கணவனை யாதல் தமக்குரிய பிறரையாத லிழந்து புலம்புறு மகளிரிடைச் சென்று அந்நுட்ப மறிந்து கொளற் பாலி ரென்றும், புலம்பற் பொருணுதலி வருஞ் செய்யுட்களி ளெல்லாம் அவ்வத் தலை மகன் செய்து போந்த வென்றித் திறமாகிய வாகைத்திணைப் பொருளு மிடையிடையே விராய்வருத லியற்கையா மென்பது பொருளிலக்கண நுட்பவறிவு கொள்வார்க் கெல்லா நன்று புலனாமாதலி னதனை யுணர்தற்கு நுமக் குணர்ச்சி சாலா தென்றும், புனைந்துரை வகையாற் கூறிய “வான்மதி மீனின் நீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ” என்னும் அணி யிலக்கண வுவமைக்கும் பொருளிய லறிவுறுத் துண்மை நிறுவுதற்கண் வரும் அளவைநூ லுவமைக்கும் வேறுபா டறியாது ஒன்றைப் பிறிதொன்றனொடு மயங்கப் படுத்துக் கூறும் நீர் வரலாற்று முறையா னெம்மைச் சார்ந்து உசாவு விராயி னவ்வேறுபாடு விளங்க நுமக்கறிவு கொளுத்துவா மென்றும், ‘என்னுயர் தந்தையினும்' என்பதில் உயர் என்பது தந்தை என்பதனொடு வினைத் தொகைப்பட முடிந்ததாகலின தனை யறியாது எம்புன்மை என்பதனொடு மற்றது மாறுபட்ட தன நீர் கூறியது மயக்கவறிவின் பெற்றியா மென்றும், ஓரடியில் உயர் என்னுஞ் சொற் பலவருதல் சொற்பின் வருநிலை யென்னு மணியாமா றுணராது கூறியது கூறலென்னுங் குற்றமா மெனக் கூறிய நீர் “பாவக மேற்றானசத்தாம்” என்னுந் திருப்பாட்டிற் கெல்லாம் வகை சொல்ல வறியாது விழிக்கு நீரராவி ரென்றும், ஐந்தாஞ்செய்யுளில் மாறுபா டிதுவென் றுரை யாமல் வாளாது மாறுபாடெனக் கூறுதல் தோல்விக் கிடமாமென்றும், 'மறைந்தனை' என்னும் முடிபுவினை யிறந்தகாலப் பொருண்மையி னிற்றலி னதற்கேற்ப ‘மதித்திலம்’ என இறந்தகாலத்தில் வைத்தோதியவா றறியாது அதனை ‘மதிக் கிலம்' என எதிர்காலப் பொருண்மையின்வைத் தோதல் வேண்டுமென நீர் கூறியது வழுவாமென்றும், 'அறியும்' என்னுஞ் செய்யு மென்வாய்பாட் டேவல் வினைமுற்றுச் *

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/84&oldid=1587191" இலிருந்து மீள்விக்கப்பட்டது