உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் – 21

புறம்பொதுங்கிய நீவி ரிவை யெல்லா மறிதற்கு யார்? என்றொழிக. சிவத்தொடு தொடர்புடைய சைவ மென்பது அடை கொடுத் துரையா துரையா வழி யெல்லாஞ் சித்தாந்த சைவமென்றே பொருடரு மென்பதூஉம், பாடாண வாதசைவம் முதலியவாக அடைமொழிகொடுத்துக் கூறும் வழியே வேறு வேறு பொருள் படுவான் செல்லு மென்பதூஉம் நோக்கி யன்றே” இராசாங்கத்தி லமர்ந்தது வைதிக சைவ மழகி தந்தோ" என்றும் “சைவ சமயமே சமயம்" என்றுஞ் “சைவத்தின் மேற் சமயம் வேறில்லை” என்றும் உண்மைப் பொருள் வலியுறுத்துவான் புகுந்த திருப்பாட்டுக ளெழுந்தன வென்க. இனி நீர் சொல்லும் திருப்பாட்டுகளெழுந்தன கூற்றிற்கு ஒரு சிறிதும் பொருந்தாமல் இடர் செய்து நமது சித்தாந்தத்தினை நாட்டுதற்கு உதவி செய்வதா வெழுந்த ‘சைவ சமயமே சமயஞ் சமயாதீதப் பழம்பொருளை' என்னுந் திருப்பாட்டை யெடுத்துக் காட்டி 'யானு மறியே னவளும் பொய்சொல்லாள்' என்பதனை மெய்ப்படுத்தினீர்.

ரு

இனி நீர் சைவம் என்பது சிவாகம மெனவும் பொருடரு மென் றும், சித்தாந்த ரத்தனாகரம் முதலியவாகப் பெயர் தந்ததன்றிச் சைவ ரத்தினாகரம் முதலியவாகப் பெயர் தராதவாறென்னை? என்றும் ஒருகடா வெழுப்பினீர். ஒரு சொல் லின் முதன்மைப் பொருளும் பிற பொருளும் அச்சொல்லின் பரவை வழக்கானும் அருகிய வழக்கானும் உறுதி செய்யபடு மாதலின், அச்சொல்லிற்குப் பலபொருளுள வாதல் பற்றி யச்சொ லப்பொருட் கெல்லாம் ஒரு பெற்றிப்பட வுரிமை கொள்ளுவான் செல்லுமெனச் சொல்லிலக்கண வியல்பறியாது நீர் குழறிய தீண்டைக்குப் பயன்படாதென் றறியக் கடவிர். பரவை வழக்கானும் அருகிய வழக்கானுஞ் சொற்பொரு டுணியுமாறு முனிமொழிப்பிரகாசிகையி லினிதெடுத்து விளக்கி னாம். ஆண்டுக் காண்க. சைவ மென்னுஞ் சொற் பரவை வழக்காற் சித்தாந்தப் பொருண்மைத்தா மாகலிற் சித்தாந்த ரத்தினாகரம் என்று பெயரிடினும் அஃது இழுக்காதென் றறிக. இங்ஙனமாகலிற் சங்கற்ப நிராகரண நூலோடும், ஏனை மெய்கண்ட நூற் பொருளோடுஞ் சைவமென்னுஞ் சொல் முரணுமாறில்லை யென்பது நிறுவப்பட்டவாறு காண்க.

னி நீர் கையறுநிலைப் பாட்டுக்க டோறுஞ் சில போலிக் குற்றங் கூறினீ ராகலா னவற்றை யெல்லாம் ஒருங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/83&oldid=1587190" இலிருந்து மீள்விக்கப்பட்டது