உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

49

மெய்யுணர்ச்சியெனத் துணிந்து சோமசுந்தரக் காஞ்சிக்குக் குற்றங் கூறப் புகுந்த நும்மைக் கண்டு "மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்த “னென் றெள்ளி யறிவுடையா ரெல்லாரும் நகையாடுவா ராயினரென் றொழிக.

இனிச் 'சைவம்' என்னுஞ் சொற் பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சங்கிராந்தவாத சைவம் முதலியனவாகப் பல வேறு வகைப்பட வழங்கக் காண்டலிற் சித்தாந்த சைவமென் றுரையாது வாளா சைவமென்று கூறிய திழுக்காமென் றுரைத்தீர். நுமது சைவ சித்தாந்த வுணர்ச்சி சால வழிகிது! மெய்ஞ்ஞானம் அஞ்ஞானமென அடைமொழி கொடுத்து விசேடித்தவழி வேறு வேறு பொருள் பயந்து நின்ற 'ஞானம்' என்னுஞ் சொல் அங்ஙனம் விசேடியாது நின்றவழி மெய்ஞ் ஞானம் எனவே பொருடரு முறைமை யுணர வல்லார்க்கு நும் முரையி னிரம்பிய வழுக்க ளெல்லா மினிது விளங்கும். இனி யங்ஙனமே சிவன் என்னுஞ் சொல்லும் பரமசிவன், சதாசிவன், நீலகண்ட சிவன், சுப்பிரமணிய சிவன், திரிபுர சங்கார சிவன், தத்புருட சிவன், அகோர சிவன், சத்தியோசாத சிவன் முதலியனவாகப் பல தொடர் மொழிகளி லியைக்கப்பட்டுப் பொதுமையின் வழங்கக் காண்டலின் அந்தச் சொல்லுஞ் சித்தாந்த சைவத்தில் வழங்குதற் கேலாதா மென்று சொல்ல வுடன் படுவிரோ? இனி ஆசிரியர் அருணந்தி சிவாசாரிய னி சுவாமிக ளோதியருளிய,

66

‘புறச்சமய நெறிநின்று மகச்சமயம் புக்கும்

புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம வறத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்து மருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படித்துஞ்

சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேதச்

சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்

திறத்தடைவ ரிதிற் சரியை கிரியா யோகஞ்

செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்”

என்னுந் திருப்பாட்டிற் சித்தாந்த சைவமென் றோத வேண்டிய விடத்துச் சைவம் எனப் பொதுமையின் வைத் தோதுதன் மலைவா மென் றவர்மீது குற்றமேற்றப் புகுவிரோ? சித்தாந்த சைவத்தின் மரபுணர்தற்குத் தகுதி யிலராய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/82&oldid=1587189" இலிருந்து மீள்விக்கப்பட்டது