உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

அநுபந்தம் - 1

ஆனந்தக் குற்றம்

இது சோமசுந்தரக் காஞ்சி, காஞ்சியாக்கம்

வைகளைப்

பாராட்டியும், ஆனந்தக் குற்றத்தைப் பற்றி ஒருசில தடை நிகழ்த்தியும் சோழவந்தான் வித்துவான் திரு. அ.சண்முகம் பிள்ளையவர்கள், ஸ்ரீலஸ்ரீ - சுவாமி வேதாசல மவர்கட்கு எழுதிய கடிதமாகும். இதனை ஞானசாகரம்" முதற்

66

பதுமத்திலிருந்து எடுத்துப் பதிப்பிட் டிருக்கின்றாம். பதிப்பாசிரியன்.)

சிவாநுபூதிச் செல்வரும், செந்தமிழ்ப் புலவரும், என் ஆப்த நண்பருமாகிய ஐயா அவர்கட்கு அநேக வந்தனம் செய்து எழுதும் விண்ணப்பம்:-

எழுமையுந் தொடர்ந்த உழுவலன்புடைய ஐய,

தாம் அன்பு கூர்ந்து விடுத்த தமது நூல்களும் ஞான சாகரத்து 4 -வது இதழும் பெற்று உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருகித் தமது தரிசனம் எஞ்ஞான் றெய்துங் கொலோ வன வரம்பிகந்த அவாவின்க ணமிழ்கின்றேன். அகல் வானத் தும்ப ருறைவார் பதியினும் இன்பமிக் கெய்தற் கேதுவான சான்றோர் நட்பையே பெரும் பொருளெனக் கருது மடியேற்குத் தமது கருணையால் மற்றைப் புலவரது மாண்புற்ற நண்பும் வாய்க்குமேல், அது சிந்தாமணி தெண்கட லமிர்தந் தில்லையா னருளால் வந்தா லதனை யொக்கு மன்றே.

காய்த லுவத்த லகற்றி யொரு பொருட்க ணாய்த லறிவுடையார் கண்ணதே யாயினும், தமது ஆணையை

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/89&oldid=1587196" இலிருந்து மீள்விக்கப்பட்டது