உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

57

மறுத்தற் கஞ்சித் தாம் விடுத்த வற்றுட் சில படித்து என் புல்லறிவிற் கெட்டிய வண்ணங் யுட்கிடையை வெளியிடுகின்றேன்.

காண்ட உண்மை

தாம் இயற்றிய மும்மணிக் கோவையும், நெஞ்சறி வுறூஉவும் படித்தேன். அவை பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பஞ்ச காவியம், பதிணென் கீழ்க்கணக்கு முதலிய சான்றோர் செய்யுட் கற்று வல்லுநர்க்கே பெருமகிழ் வுறுத்து மருமந்த நூலாகக் காணப்படுகின்றன. அந்நூல்களி னருமையை ஒன்று மறியா யானோ அறிய வல்லேன்?

அவற்றுள் முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவ மென்பது கொண்டு இடை யிடையே அமைக்கப் பெற்ற திருவள்ளுவர், திருக் கோவையார், திருமுருகாற்றுப் படை, சிந்தாமணி முதலிய நூல்களினுள்ள அல்லாந்து, பேய்கண் டனையது, கழல்கண், முழுநெறி முதலிய பல அரிய சொற்களுக்கு அந்நூல்களி னுரை யுதவியாற் பொருள் கண்டு பெரிதுவந்தேன். உரையிலா அகநானூறு முதலிய நூல்களி லிருந்தும் பல சொற்களும் சொற்றொடர்களும் சில அடிகளும் காணப்படுகின்றன; அவைகளுக்குச் சிறுபான்மை விளங்கினும் பெரும்பான்மை விளங்காமையாற் குன்று முட்டிய குரீஇப்போ லாயினேன். மதிநுட்ப நூலோடுடைய சிலர்க்கே பயன்படற் பாலவாய அவை ஏனோர்க்கும் பயன்படுமாறு ஒரு நல்லுரை விரைவிற் பெறல் வேண்டு மென்பது என் கருத்து. இங்ஙன நூலியற்றல் சங்கமிருந்து தமி ழாராய்ந்தார்க்கும், பின்னுள்ளாரிற் கல்லாட நூலார், ஞானாமிர்த நூலார், கச்சியப்ப முனிவர், குமர குருபார், முதலிய சிலர்க்கும், தமக்குமே யன்றி யேனையோர்க்கு எவ்வாற்றானும் அரிதரிது என்பது அழுக்கற்ற நெஞ்சத்த ரல்லாத நட்டார் பகைவர் நொதுமல ரென்னு முத்திறத்தாரு மொத்துக் கோடற் பாலதேயாம்.

இனிக்

காஞ்சி யாக்கத்திற் கழறிய வல்லாம் கற்றோர்க்குக் கழிபே ருவகை பயக்கு மென்பது எட்டுணையு மறுக்கற் பாலதன்று. கல்லாச் சிறு மகார் கூடிச் சிற்பம் வல்லார் வகுத்த மணி மாடத்தை யிகழ்ந்தாங்குச் சில்லோர் நவை தூற்றினும், காஞ்சி மலைமேலிட்ட தீபம்போல் விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/90&oldid=1587197" இலிருந்து மீள்விக்கப்பட்டது