உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் - 21 –

அதனு ளானந்தக் குற்றம் பரிகரிக்கும் மிடத்துப் பாட்டியன் மரபுப்படி ‘சைவ’ மென்னுஞ் சொல் ஞான மங்கள் வுருவாய சிவத்தொடு சம்பந்த மென்னும் பொருடரலாற் கங்கை நிலம் பிறவுங் காண்ட கைய முன்மொழிக்கு மங்கலமாஞ் சொல்லின் வகை’ யென்பதனுட்

6

பிற

வன்பதனாற் றழீஇக்கோடற் பாற்றெனவும் 'தப்பாத மூன்றைந்தே ழெ'ன்னுஞ் செய்யுளின்படி எழுத்துப் பொருத்த முள்ள தெனவும், 'குறிலைந்துந் தந்நெடில்கொண்' டென்னுஞ் செய்யுளின்படி தானப் பொருத்த முள்ள தெனவும் தம்மாலே நன்கு விளங்கப்பட்டன. இனி, வகையுளி சேர்தன் முதலிய வின்மையாற் சொற்பொருத்தமும், சகரம் அமுத வெழுத்தாதலி னுண்டிப் பொருத்தமும், இறைவன் பெயர் முதற்கணின்ற 'சோ'

என்னும் எழுத்துக்குரிய பரணி தொடங்கி முதற்சீர்

முதற்கணின்ற சை என்னு மெழுத்துக்குரிய அச்சுவினி வரை எண்ண உபசென்மத்து ஒன்பதாம் நாளாதலின் நாட் பொருத்தமும், சகரந் தேவகதியாகலிற் காணப்பொருத்தமும், மங்கலங் குறித்துச் சொற் பொருத்த முதலிய சில வேறுபடினு மமையு மென்பது பாட்டியன் மரபாதலிற் பாற்பொருத்தமும், வருணப் பொருத்தமும், ஆக பத்துப் பொருத்தமும் சைவ மென்னுஞ் சொற்கண் வெள்ளிடை மலைபோல விளங்கிக் கிடப்பவும், இப்பரூஉப் பொருடானு முணராது நவை கூறினாரது புலமை குறித்துக் கவல்கின்றேன்.

L

இனி ஆசிரியர் அகத்தியனார், ஆசிரியர் தொல்காப்பிய னார் முதலாயினார் கூறாமையிற் பாட்டியலிற் கூறிய ஆனந்தக்குற்ற முதலிய கொள்ளப்படா வெனவும், அவை கூறிய பிற்காலத்து நூல்கள் பிரமாணமாகா வெனவும் அவை கூறிய யாமளேந்திரர் முதலியோர் சமணப் போலிப் புலவரெனவும், இப் போலிநூற் பிரமாணங் கொள்ளாமையாற் சிவஞான யோகிகள் முதலாயினார் மங்கல மொழி முதனிலையிட் டுரைத்தில ரெனவும், சங்கமிருந்து தமி ழாராய்ந்த நல்லிசைப் புலவர்தாமும் இந் நியதியின்றி ‘அறாஅயாணர், ‘நனந்தலை’ யெனத் தொடங்கினா ரெனவும், ஆயிடைக் காணப்படுஞ் சிலவுரைகண் மட்டுமே என் கருத்துக்கு மாறாகத் தோன்று கின்றன. அவற்றைச் சில பயன் கருதியும், உட்கோட்டமின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/91&oldid=1587198" இலிருந்து மீள்விக்கப்பட்டது