உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

59

யுரைத்தல் வேண்டு மென்னுஞ் செப்பங் கருதியும், 'இனியவ ரென்சொலினுமின் சொல்லே' யெனத் தம்போல்வா ரெல்லா முவத்த லுண்மை பற்றியும், முறையே மறுத் தெழுதத் துணிந்தேன்.

அவை யெல்லார்க்கு மொப்ப முடிந்தவோ அல்லவோ அறியேன். அவற்றுட் பொருந்துவன வுளவேற் றெளிவுறக் காட்டி யென்னைத் திருத்துமாறு நட்புரிமையாற் பிரார்த்திக் கின்றேன்.

இயற்பெயர்

சார்த்தி யெழுத்தள பெழினே, யியற்பாடில்லா வெழுத்தானந்தம்' எனவும் இயற்பெயர் மருங்கின் மங்கல மொழியத், தொழிற்சொற் புணர்ப்பினது சொல்லா னந்தம்' எனவும், ‘புகழச்சி' என்னுஞ் சூத்திரத்து 'அவமொழி யாக்கும் பொருளா னந்தம்' எனவும், முதற் றொடை யென்னுஞ் சூத்திரத்து, ‘யாப்பா னந்தமென் றியம்பல் வேண்டு' மெனவும், ‘பாவகை யொருவனை' என்னுஞ் சூத்திரத்து ‘தூங்கினுஞ் சுழலினுந் தூக்கா னந்த’ மெனவும், அளபெடை மருங்கின்' என்னுஞ் சூத்திரத்து, தாடை யானந்த மெனத்துணிதல் வேண்டு' மெனவும், மெனவும், இவ்வாறு ஆசிரியர் அகத்தியனார் ஆனந்த வோத்துட் சூத்திரஞ் செய்தமையால் ஏனைப் பாட்டியல் மரபும் அவரது விரிந்த நூலின்கட் கூறப்பட்டே யிருத்தல் வேண்டு மென்பது, சிற்றகத்தியம்பேரகத்திய மிரண்டும் சிற்சில சூத்திரத்தளவின் முன்னோ ருரைகளிற் காணப்பட்டுக் கடைச்சங்கத்தார் காலத்தே யிறந்த வெனினும், அனுமானத்தாற் கொள்ளக் கிடக்கின்றது.

ஆசிரியர் தொல்காப்பியனார் முத்தமிழும் விராஅய்ப் பரந்து கிடந்த முதனூலினின்றும் இயற்றமிழை வேறுபடுத்துத் தொகுத்து நூல் செய்யப் புகுந்தா ராகலின் இலேசானும், உத்திவகையானும், புறனடையானும், பிறவாற்றானும் எளிதி னுணரப்படுவனவும் சிறிது பயனுடையனவும் சிறப்பில்லனவு மாகிய இலக்கணங்களை யுணர வைத்துச் சிறப்பினவும் மிக்க பயனுடையனவும் அரிதினுணர் வனவுமாகிய இலக்கணங் களையே சூத்திரித்தார். 'முன்னிலை சுட்டிய' வென்னுஞ் சூத்திரத்தானும், 'தாவி னல்லிசை’ யென்னுஞ் சூத்திரத்தானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/92&oldid=1587199" இலிருந்து மீள்விக்கப்பட்டது