உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் – 21

அகலக் கவியை முடிபு நோக்கியும் துறை நோக்கியும் விதந்து கூறலின் ‘அகன்று பொருள் கிடப்பினும்' என்னும் சூத்திரத் தானும் 'மாட்டு மெச்சமு' மென்னுஞ் சூத்திரத்தானும், பொருட்டொடர் நிலைச்செய்யுளும் சொற்றொடர் நிலைச்செய்யுளும் பெறப்பட்டன. இனி, அகலக்கவிக்கே பெரும் பாலும் பயன்படுவனவாய்ச் சிறப்புடைச் சொல் லாராய்ச்சி க்குச் சிறிதும் பயன்படாவாய் நுட்பமிலவா யிருத்தலின் தசப்பொருத்த மின்மை முதலிய குற்றங்களை, அன்ன பிறவு மென்பதனாற் றழீஇ அவற்றுள்ளும் மங்கலச் சொல்லை முதற்கட் கோடல் எல்லா நூற்கு மின்றி யமையாமை யென்பது விளக்கற் பொருட்டு, 'எழுத்தெனப் படுப' வென மங்கலச் சொல்லை முதற்க ணெடுத்து உடம்பொடு புணர்த்துக் கூறினார். அதனையே பிற்காலத்தார் வழக்கு நோக்கிப் பாட்டியலென விரித்துக் கூறினார். அன்றியும் முன்னுள்ள இசைத் தமிழ் நூல், நாடகத்தமிழ் நூல்க ளுரைத்தனவாக முன்னோருரைகளால் விளங்குகின்றது. இனி அவர் கூறிய அளவன்றி விரித்துக் கூறிய நூல்கள் பிரமாணமாகா வெனின், ஆவோ டல்லது யகர முதலாது' எனத் தமிழ் வழக்கு நோக்கி வரையறுத்திருப்பப் பிற்காலத்து வடமொழி விராஅய வழக்கு நோக்கி ‘அ, ஆ, உ, ஊ, ஒ, ஓள யம் முதல்' என வெழுந்த நன்னூற் சூத்திரமும் பிரமாண மாகா தொழியும். ஒழியவே, 'நாக நறுமலருதிர யூகமொடு' எனவும், ‘பிணையூப மெழுந்தாட' வெனவும், திருமுருகாற்றுப் படையினும், மதுரைக் காஞ்சியினும் வந்தன வழுவெனக் கொள்ளவும் படும். இன்னுந் தொல்காப்பியத்துட் கூறாமை பற்றி, கலம்பக முதலிய பல பிரபந்தங்கள் இலக்கணமின்றி யெழுந்தன வெனவும் படும்; ஆதலின் இன்னோரன்ன வெலாம் மரபுநிலை திரியா மாட்சிய வாகலின் பிரமாணமாதற் கிழுக்கா. தவத்தான் மனந் தூயராய அகத்தியனார், தொல்காப்பியனார், திருவள்ளுவனார், சமயகுரவர், ஆழ்வாராதியர், பட்டினத்தடிகள், இறையானார் முதலிய சில தெய்வப்புலவ ரன்றி ஏனைய நூலுரை போதகா சிரியர் மூவரும் முக்குண வசத்தான் முறை மறந்தறைத லியல் பாகலின், பின்னூல் களிடை முன்னூலொடு முரணிய சில வழுக்கள் காணினும் அதுபற்றி முழுதுங் தள்ளாது குணனாடிக் குற்றமு நாடி யவற்றுண் மிகைநாடி மிக்க

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/93&oldid=1587200" இலிருந்து மீள்விக்கப்பட்டது