உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

61

கொளலே' மாண்பு. முற்கூறிய தெய்வப் புலவரோ டொப்பா ரல்லராயினும் புலவர் சிகாமணிகளாகிய அடியார்க்கு நல்லார், குணவீரபண்டிதர், முதலிய பலர்க்கு மேற்கோளாகிய இந்திரகாளி யென்னும் இசை நூலைச் செய்த யாமளேந் திரரும் முன்னூ லொழியப் பின்னூ லெவற்றினுஞ் சிறந்த நன்னூல் செய்த பவணந்தியாரும், இன்னும் பிற நற் புலவரும் எவ்வாற்றானும் போலிப் புலவ ரென இகழப் படார். ஒவ்வோர் வழுக்கண்டு இப் பெரும் புலவரையும் இவரொப்பாரையும் போலிப் புலவரெனின், வழுவிலார் பின் யாவருளர்? ஒருவரு மிலரே? 'அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா, லின்மை யரிதே வெளிறு' என்பது பொய்யா மொழி யன்றோ?

இதனை நகுதற் பொருட் டன்று நட்ட லென்பது கொண்டெழுதினேன்; மன்னித் தருளுக.

இனி யாமளேந்திரர் யாமளாகமம் செய்த ஒரு சித்தர்; சமணரல்லர்; இவரை அடியார்க்கு நல்லார் பராசைவ முனிவ ரென்பர். இந்திரகாளி, நன்னூல், வச்சணந்திமாலை முதலியவற்றுள் முன்னூலோடு முரணாதன முரணாதன வெல்லாம் பிரமாணமே. மரபு நிலைதிரிந்து முரணிய விடங்களு முள. அவை யீண்டுரைப்பிற் பெருகும்.

இனிச் சிவஞான யோகிகள் இந்திரகாளி முதலிய நூலைப் பிரமாணமாகக் கொள்ளாராயின், இலக்கண விளக்கச் சூறாவளி யின்கண் ‘மலையு மகளென அமங்கலப் பொரு டந்து தொகையார் பொருள் பலவாய்த் தோன்றிற்' றெனக் குற்றங் கூறார்.

சங்கப் புலவரு ளொருவராகிய மாமூலரும்

“நீரது கணமே சீர்சிறப் பெய்தும்

தீயின் கணமே நோயது சேரும்

அந்தர கணமே வாழ்நா ளகற்றும்

இந்திர கணமே பெருக்கஞ் செய்யும்

சந்திர கணமே வாழ்நா டரூஉம்

மாருத கணமே சீர்சிறப்பகற்றும்

நிலக்கணந் தானே மலர்த்திரு விளங்கும்"

6 எனவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/94&oldid=1587201" இலிருந்து மீள்விக்கப்பட்டது