உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

❖ 21❖ மறைமலையம் – 21

'நட்பர ணெதிபகை மரண மைந்தனு, ளொப்புடைக் குறிக்கோ ளொருமூன் றாகும்' எனவும் தானமுங் கணமுங் கூறிக் கணத்திற்குப் பயனுங் கூறினார். பன்னிரு பாட்டியன் முதலிய நூல்களாற் பொய்கையார் முதலிய நல்லிசைப் புலவரும் பாட்டியல் செய்திருப்பதாகக் காணப்படுகின்றது. ஆகவே, சங்கமிருந்த நல்லிசைப் புலவர் காலத்தும் பற்பல பாட்டியல் வழங்கிய வெனவே எண்ணுகின்றேன்.

ஆயின், மங்கல முதலியன சங்கத்தார் நூலினும் சிவஞான யோகிகள், கச்சியப்பர் முதலாயினார் நூலினும் உளவோ வெனின், உளவென்பதே தேற்றம்.

எங்ஙனமெனில், மங்கலச்சொல் தனித்தும், அடை யடுத்தும் முதற் பாட்டின்கண் முதற்சீரே யன்றி கடையினும் வரப் பெறு மென்பது பாட்டியல் விதி யாதலின், பத்துப்பாட்டின் கண் 9-வது பாட்டில் புகழென்று மங்கலம் அடையடுத்து வந்தது. 8-வது பாட்டில் 'பிற' என்பதாற் றழுவிய வாழி யெனும் மங்கலம் அவ்வாறு வந்தது. 6-வது பாட்டில் முந்நீர் அவ்வாறு வந்தது. 5-வது பாட்டில் உலக மென்பது அவ்வாறு நனந்தலை யென அடையடுத்து வந்தது.4-வது பாட்டில் பிற வென்பதாற் றழுவிய விசும் பென்பது அவ்வாறு வந்தது. 2-வது பாட்டில் மங்கலச் சொல்லின் பரியாய மாகிய யாண ரென்பது அறாஅ, வென அடையடுத்து வந்தது. மற்றைப் பாட்டின்கண் விதந்து கூறிய மங்கலச் சொற்களே முதற்கண் வந்தன. சிந்தாமணிக்கண் உலக மென்பது மூவா முதல்வா வென அடையடுத்து வந்தது. சில ஆசிரியர் நூன்முதற் கண்ணும், சில ஆசிரியர் நூற்குறுப்பாதல் பற்றிப் பாயிர முகத்தும், சிலர் ஈரிடத்தும் மங்கலங் கூறல் வழக்காதலின், மணிமேகலையின் பதிகத்தின்கண் இளங்கதிர் ஞாயிறென அடையடுத்தும், நூன் முதற்கண் உலகமெனத் தனித்தும் வந்தன.

6

இனி, புறநானூற்றின்கண் மாலை யென்னு மங்கலச் சொல்லின் பரியாய மாகிய கண்ணி யென்பதே வந்தது. ஆண்டும் நியதிதப்பிலது. இனிக் காஞ்சிப் புராணத்தையும் தணிகைப் புராணத்தையும் நோக்கின் நூலகத் துறுப்பாகிய கடவுள் வாழ்த்திற் சேர்க்காது, புறத்தே இயற்றிய காப்புச்செய்யுளில் மங்கலங் கருதற்பாற் றன்று; காஞ்சிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/95&oldid=1587202" இலிருந்து மீள்விக்கப்பட்டது