உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

  • மறைமலையம் 22

இனிப், பாண்டிய மன்னன் அக் குதிரைத் தலைவ னோடுடன் போந்த சாத்தவர்கட்கெல்லாம் உயர்ந்த தூசுகள் நல்கி எல்லாரையும் விடைகொடுத்துப் போக்கியபின், திருவாதவூரடிகட்குப் பொற்பட்டம் முதலான வரிசைகள் அளித்து அவரையும் மனைக்கேகப் பணித்துத் தானுந் தன் அரண்மனைக்கட் புகுந்தான். குதிரைச் சேவகனாய் வந்த பெருமான் பாண்டியன்பால் விடைபெற்று ஏகத் துவங்குகையில் அடிகள் ‘பிடித்தபத்துப்' பாடியருளினாரென்னும் நம்பியா ருரை பொருத்தமாகக் காணப்பட வில்லை; என்ன? தம்மையுந் தம் மனைவிமக்கள் முதலான குடும்பத்தாரையும் உலக வாழ்க்கையில் வாழவொட்டாது பிரித்துத் தனது திருவடிப் பேரின்ப வாழ்வில் வாழவைத்த இறைவனது திருவருட்டிறத்தை வியந்து,

“ஊத்தையென் றனக்கு வம்பெனப் பழுத்தேன் குடிமுழு தாண்டு

வாழ்வற வாழ்வித்த மருந்தே”3

என்று அதன்கட்டாம் அமைச்ச வாழ்க்கையினின்றும் விடுவிக்கப் பட்டமையினை நன்கெடுத்துக் கூறுதலானும், தாம் இறைவற்குத் திருவடித் தொண்டரான சிறப்பும் தம்பொருட்டுக் குதிரை காண்டு குதிரைமேல் வந்த எல்லாம் வல்ல பெருமானின் உண்மையும் அறியாமல் தம்மை அமைச்சராகவும் தம்பொருட்டு வந்த ஆண்டவனைக் குதிரைச் சேவகனாகவுமே நினைந்து அதற்கேற்பவே ஒழுகிய அம் மன்னன் முன்னிலையில் தம்மியல்பையுந் தம் தலைவனியல்பையுந் தமக்குள்ள அன்பின் பெருக்கையுந் தெற்றெனப் புலப்படுத்தி அப் பிடித்தபத்தினை அருளிச் செய்தல் ஆகாமையானும் என்பது. அது நிற்க.

1.

திருப்பாண்டிப் பதிகம், (6)

அன்னைப் பத்து, (7)

2.

3.

பிடித்த பத்து, (1)

அடிக்குறிப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/119&oldid=1587565" இலிருந்து மீள்விக்கப்பட்டது