உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1 18

85

யாடலும் திருவாதவூரர் புராணமுங் கூறாநிற்கப், பரஞ் சோதி முனிவர் திருவிளையாடலோ அங்ஙனம் பாண்டியன் நல்கிய துகிலினை அக் குதிரைத் தலைவன் தன் குதிரை யினின்றும் இறங்கிப் பணிவுடன் ஏற்றுத் தன் தலைமேற் சூடிக்கொண்டான் எனக் கூறும். நம்பியார் திருவிளையாடல் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்கும் திருவாதவூரர் புராணத்திற்கும் மிக முற்பட்ட பழைய காலத்தே இயற்றப் பட்டதொன் றாகலானும், அதன்கட் கூறப்படும் வரலாறுகள் ஆராய்ந்து பார்க்குங்காற் சிற்சில வகைகளிற் றவிரப் பெரும் பாலும் பொருத்தமாகவே காணப்படுதலானும், அதற்குப் பின்வந்த திருவாதவூரர் புராணமும் அந் நூலுட் கூறுமாறே இவ் வரலாற்றினைக் கூறுதலானும் இவ்விரண்டு நூல்கட்கும் மாறாகப் பரஞ்சோதியார் திருவிளையாட லுரைக்கு முரை கொள்ளற்பால தன்றென மறுக்க, ஆராய்ந்து பார்க்குந்தோறும் பரஞ்சோதியார் திருவிளையாடல் ஒருகாற் சிலகாலன்றிப் பலகாலும் பிழை படக் காண்டலின் முன்னை நூல்களோடு முரணும் இடங்களிலும், ஆராய்ச்சிக்குப் பொருந்தா இடங்களிலும் இதனுரை உண்மையெனத் துணியற்பாற்றன்று.

இனிக் குதிரைமேல் வந்த அத் அத் தலைவன் சிவ

பிரானே யென்பதூஉம், நேரே கண்டு வைத்தும் அவன் அப் பெருமானாதலைப் பாண்டியன் சிறிதும் உணர்ந்தில னென்பதூஉம் அடிகளே,

“ஈண்டிய மாய இருள்கெட எப்பொருளும் விளங்கத்

தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்லவல்லன் அல்லன்!'

என அருளிச் செய்தவாற்றால் நன்கு பெறப்படும். இது கொண்டு, இப் பாண்டிய மன்னன், வேப்பங் கனிகளையுஞ் சிவலிங்க வடிவாய்க் கண்ட வரகுண பாண்டியன் அல்லனென்பதூஉம் மேலுமேலும் வலியுறுத்தப்படுதல் காண்க.

இ) னிக் குதிரைமேல் வந்த இறைவன் ஆரியர்க்குரிய குப்பாயச்சட்டை அணிந்திருந்தா னென்பதுஉம்,

அணிந்திருந்தானென்பதுஉம்,

“பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

”2

என்று அடிகளே ஓதுமாற்றாற் பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/118&oldid=1587564" இலிருந்து மீள்விக்கப்பட்டது