உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் 22

எண்ணினவனாய்

விலைகொள்ளுதற்குக் கொடுத்த பொன் முழுதும், இவற்றுள் ஒரு குதிரைக்கும் போதாது என்று அவற்றைக் கைக்கொண்டான்; கொண்டு, பரித்துறைக் காவலாளரைக் கூஉய், அப் புரவிகளை யெல்லாம் அவர்பால் ஒப்புவித்து, அவை தம்மையெல்லாம் பந்திகளிற் சேர்ப்பிக்கு மாறு கட்டளையிட்டான்.

பின்னர்க், கிடைத்தற்கரிய துள்ளுவாம்பரிகள் கிடைக்கப் பெற்ற பெருங்களிப்பினாலும், அக் குதிரைப் பாகன் காட்டிய குதிரையேற்றத்தைக் கண்டு அவனை வியந்த வியப்பினாலும் பாண்டிய மன்னன் விலையிடுதற் கரிய பொற்பட்டாடை ஒன்றைத் தன் கையாலெடுத்து அதனை அக் குதிரைத் தலைவற்கு நல்க, அத் தலைவன் அதனைத் தன் சாட்டைக் கோலின் முனையால் வாங்கித், தன்னடியாரான வாதவூரர் பொருட்டு அதனைத் தன் முடிமிசைப் புனைந்துகொண்டான். இங்ஙனங், குதிரைத் தலைவன் குதிரையேற்றங் காட்டித் தான் கொணர்ந்த புரவிகளின் குற்றமற்ற இலக்கணங்கனையெல்லாம் விரித்துரைத்து அவை தம்மையெல்லாம் பாண்டிய மன்னன் பால் ஒப்படைத்தபின், விலைவரம்பற்ற பரிகளைப் பெற்றமைக்கும் அவற்றுள் ஒன்றை வியக்கத்தக்கவாறாய் நடாத்திக் காட்டிய பெருந்திறமைக்கும் மிக உவந்து இறுதியில் அம் மன்னன் அத்தலைவற்குப் 'பொற்பட்டுத் தூசு நல்கினான் என்று நம்பியார் திருவிளையாடல் உரையா நிற்கத், திருவாதவூரர் புராணமோ அக் குதிரைப்பாகன் தன் புரவியை நடாத்திக்காட்டிய அளவிலே பெரிது மகிழ்ந்து அரசன் அவற்குப் பட்டுத்தூசு நல்கினானென்று கூறும். குதிரையேற்றங் காட்டி அவற்றின் இலக்கணங்களும் முற்றவுரைத்து அவை தம்மைப் பாண்டியன்பால் ஒப்படைத்த பின், அவன் அக் குதிரைத் தலைவற்குப் பொற்றூசு வழங்கி அவனை வழிவிடுத்தா னென்றலே இயற்கை நிகழ்ச்சிக்கு ஒத்ததாகலின் நம்பியா ருரையே ஈண்டைக்குப் பொருத்தமுடைத்தாதல் காண்க.

லவரம்பற்ற அப்பொற்

இனிப், பாண்டியன் பட்டினை எடுத்து நல்கியக்கால், அக்குதிரைத்தலைவன் அதனைத் தன் செண்டுக்கோலின் முனையால் வாங்க, அதுகண்டு மன்னன் சினங்கொள்ள, அருகிருந்த அடிகள் அஃது அவரது நாட்டு வழக்கம்” என்று கூறி அவனது சினத்தைத் தணிவித்தார் என்று நம்பியார் திருவிளை

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/117&oldid=1587563" இலிருந்து மீள்விக்கப்பட்டது