உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

இவ்

――

83

படியாக நுமது திருவுருவத்தைக் கண்டு வணங்கும் அவ்வளவே யல்லாமல், வேறு எவ்வாற்றால் எவர்தாம் நுமது வடிவினை யறிவல்லார்! எல்லையற்ற வருட்பெருக்கினைக் கண்ட ன்றோ உயர்ந்தா ரெல்லாருந்தேவரீர் அடியார்க்கு எளியர் என்பர்!" என்று கண்ணீர் யாறாய்ப் பெருகப் பலவாறு வழுத்துரை கூறிப், பாண்டியனது விருப்பத்தைத் தெரிவித் தருளினார்.

அவரது

குதிரைப்பாகனாய் வந்த ஐயனும் வேண்டுகோளைத் திருச்செவியேற்றுக், குதிரையேற்றத் தில் மிக வல்லுநராயிருப்பவரும் இதற்குமுன் எங்கும் காட்டியிராத அத்துணைப் புதுவகையா லெல்லாம் அதனைத் திறம்உற நடாத்திக்காட்ட, அவற்றையெல்லாங் கண்ட மன்னன் வியப்பினாலுங் களிப்பினாலுந் தன்னை மறந்தானாய்க், கைகள் தலைமேற்குவிய அப் பெருமானை வணங்குதற் கெழுந்தவன், பின்னர்த், தன்னுணர்வுபெற்று அரசன் ஒரு குதிரைப்பாகனை வணங்குதல் தக்கதன் றெனத் தன்னைத்தான் தடுத்திருந்தான்; மற்று அங்குநின்ற பிறரெல்லாந் தம்மை மறந்து ஐயனைத் தொழுதார்.

அதன்பின், அக் குதிரைப்பாகன் வன்றிவேந்தர் கொள்ளத்தக்க பரிகளுக்கு ஆகும் இலக்கணங்களும் ஆகா இலக்கணங்களும் விரிவாக வகுத்து விளக்கித் தான் கொணர்ந்த புரவிகள் எத்தகைய குற்றமும் இல்லாத நற்பரியினத்திற் சேர்ந்தவாதலையும் எடுத்துக் காட்டி, அப் பரிகளெல்லாம் அம் மன்னன் ஏறுதற்கிசைந்தனவேயா மென்பதும் உணர்த்தித், தான் திரட்டி வந்த குதிரைகள் ஓரிலக்கத்திற்கும் விலைகள்

வ்வளவாயின வெனவுங் கணக்குச் சொல்லி மாற்றாரை வெல்லுதல் வேண்டிய அரசர்க்குச் சிறந்த குதிரைப்படை இன்றியமையாததாதலும் அக்குதிரைகளைத் தான் சிறிது காலந் தாழ்த்துக் கொணர்ந்தமை இறைவன் திருவிளையாட்டாதலும் அவன் ஏற்கக்கூறி, அக் குதிரைகளைக் கயிறு மாறிக் கொண்டபின் வரும் நன்மை தீமைகள் அரசன் பாலவே யாகுமல்லால் தன்பால் ஆகா எனவும் வற்புறுத்தி அப் பரித்திரள் முற்றும் பாண்டியன் கையில் ஒப்படைத்தான். பாண்டிய மன்னனும், அக் குதிரைத் தலைவன் சொல்லிய வற்றிற்கெல்லாம் முழுதும் உடன்பட்டு, 'நாம்

வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/116&oldid=1587562" இலிருந்து மீள்விக்கப்பட்டது