உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் 22

கையிற் செண்டு ஏந்தியபடியாய் அதனை வலமிடமாகச் செலுத்திக்கொண்டு வந்தனன்.

இங்ஙனம் வரும் இத் தலைவனது பேரழகினைக் கண்டு அத் தெருவின்கண் நிறைந்த மகளிர் ஆடவர் என்னும் இருபாலாரும் அவன்மேற் கரையிகந்த பேரன்பு கொள்ளப் பெற்றார். இங்ஙனம் பரிமேல்வந்த பாகனாரைக் கண்டு மங்கையர் தம்முட் காதல்கொண் டுரையாடினமை பொருளாகக் கொண்டு அடிகள் அன்னைப்பத்து' இயற்றி யருளினாரென்னும் நம்பியாருரை பொருத்தமாகக் காணப்படவில்லை; என்னை? குதிரைப்பாகன் கோலத்தோடு பலியேற்ற கோலத்தினையும் புணர்த்துக்கூறுதலின்; அந் நேரத்திற் செய்யப்பட்டதாயிற் பரிப் பாகன் கோலம் ஒன்றுமே கூறுதல் வேண்டுமென்க. கண்டா ரெல்லாங் காதல்கொண்டு உள்ளம் வியப்பத் தோன்றிய இப் புரவித் தலைவனும் அவன்றன் சாத்தவர்களும், அரசனால் முன்னமே வகுத்து ஒப்பனை செய்யப்பட்டிருந்த வையாளிப் பெருந் தெருவின்கண் வந்து நிரல்பட நின்றனர். அவர்க டம்மைக் கண்ட பாண்டிய மன்னன், அத் தலைவனும் அவனுடன் போந்த சாத்தவர்களும் உருவம் பருவம் அணி படை முதலிய எல்லாவகையிலும் ஒருங்கொத்திருத்தல் நோக்கி வியப்புற்று, "இவர்களுள் தலைவர் யார்?” என்று வினவப், பக்கத்திருந்த வாதவூரடிகள், "இதோ அவர் எதிரில் வருவர், என்று விடைபகர்ந்த அளவிலே, அத் தலைவனும் தன்னிரண்டு கால்களாலுந் தன் குதிரையின் விலாப்புறங்களை அதுக்கிக், கசைக்கோலால் அதன் புறத்தில் அடித்துக், கடிவாளத்தைச் சிறிது தளர்த்திப் பிடித்தபடியாய் பாண்டியன் எதிரே வந்தனன். அதனைக் காண்டலும் பாண்டியவேந்தன் அடிகளை நோக்கி, இவ் வாரியப்பாகர் இவ் வையாளிப் பெருந் தெருவின்கட் பலபடியாய் அதனை நடத்திக்காட்டுமாறு சொல்லும்!” என்று கூற, அச் சொற்கேட்ட அடிகள் எல்லாம் வல்ல தம் பெருமானைத் தாம் ஏவும்படி கற்பித்தானே யென்று உள்ளம் நைந்து, ஆயினும் அதனைப் புறத்தே காட்டாராய் அக் குதிரைப்பாகன்பாற் சென்று அவனை மனத்தாற்றொழுது, 'எம்பெருமானே! கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயினேன் பொருட்டாகக், கடவுளரானுங் காண்டற் கரிய நுமது திருவுருவத்தைப் புழுத்தலை நாயினேன் கண்ணாரக் காண எத்தவம் புரிந்தேன்! பெம்மானே! நீ இப்போது எழுந்தருளிய

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/115&oldid=1587561" இலிருந்து மீள்விக்கப்பட்டது