உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

18

81

தற்கு நெருங்கக்கண்டு, விழிகளில் நீர் ஒழுகத் திருமுகம் வியர்க்கச் சிவபெருமானை நினைந்து அடைக்கலப் பத்துப் பாடுவாரானார். இதனோடு, குயிற்பத்தும் இவ்விடர்ப் பாடான நேரத்திலேயே அடிகள் அருளிச் செய்தாரெனக் கூறும் நம்பியார் புராணவுரை ஈண்டைக்குப் பொருத்த முடைத்தாகக் காணப்படவில்லை; யாங்ஙனமெனிற், குயிற்பத்தின் ஏழாஞ் செய்யுளின்கண் “மன்னன் பரிமிசை வந்த வள்ளல்" எனப் பரிமேல் வேந்ததனை இறந்த காலத்தில் வைத்துக் கூறுதலின்; இப்பதிகம் அடிகள் மதுரையை விட்டகன்று திருவுத்தரகோச மங்கை சென்றபின் அருளிச் செய்ததாகல் வேண்டும்.

ஓசை

மதுரைமா

இனி, அடைக்கலப்பத்துப் பாடி அடிகள் உள்ளம் நைந்து வேண்டியவளவிலே பரித்தொகுதிகள் தாம் வாவி வரும் விரைவால் எழுப்பிய புழுதிகள் வானத்தை மறைப்பவும், தம்மேல் வருவார் ஊதும் எக்காள நகரிலுள்ளார் செவிகளைச் செவிடுபடுத்தவும் எல்லாருங் காண நகர்க்குள்ளே வந்து புகுந்தன. இதனைக் கண்ட பாண்டிய மன்னன் பெரிதும் வியப்படைந்து, கேட்போர் உள்ளம் உருகியுகுமாறு திருவாசகச் செழும் பாடல்கள் அழுதழுது கூறும் அடிகளை அழைத்து அருகு இருத்தி, அவர்தங் கண்ணீரைத் துடைத்துத், தாஞ் செய்த பிழையினைப் பொறுக்கும்படி வேண்டினான். இதற்குட் சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய அப் பரிகளைச் செலுத்திக் கொண்டு குதிரைச்சாத்தவர்கள் அம்மதுரைமா நகரின் கோமறுகினூடே வந்தார்கள். கடலின் அலைகள்போற் பிடரிமயிர் குலுங்கப், பல்வகை நடையும் ஓங்கிய எழிலும் கடிவாளம் பொருத செவ்வாயும் உடை உடைய வாய் வந்த அக் குதிரைகளின்மேல் இருந்த சாத்தவர்கள் எல்லாரும் தலையிற் பாகையும் உடம்பிற் குப்பாயமும் கையிற் சம்மட்டியும் உடையராயிருந்தனர். அவர்கட்கு நடுவே, மழமழவென மிளிரும் ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் அமர்ந்து, தோள்மிசை நித்திலமாலை புரள மாணிக்கக் குழைகள் செவியின்கட் சுடர் விரிந்து விளங்கப் பளபளப்பான குப்பாயம் உடம்பின்கண் மினுமினுவென்று திகழ அவர்கட்குத் தலைவனான ஒருவன் தன் குதிரையின் கடிவாளங்களை ஒரு கையில் வலித்துப் பிடித்து மற்றொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/114&oldid=1587560" இலிருந்து மீள்விக்கப்பட்டது