உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

L

5. குதிரைப்பாகற்கும் மன்னற்கும் இடை நிகழ்ந்த நிகழ்ச்சி

இனி, வாதவூரிற் சிறைக்காவலரா யிருந்த தூதுவர் பரித்திரள் வருகையைக் கண்ட அளவானே மனம் மகிழ்ந் தாராய், உள்ளே அடிகள்பாற் சென்று புரவிகள் வந்தமை யினை அறிவித்து அவற்றின் வருகையைப் பாண்டிய மன்னற்குச் சென்று அடிகளே நேரிற் றெரிவிக்குமாறு ஏவி, அவரைச் சிறையினின்றும் விடுதலை செய்தார். அதனைக் கேட்டதும், அடிகளும் அளவில்லாத மகிழ்ச்சிமிக்காராய், மதுரை ஏகிப் பாண்டிய மன்னனை நெருங்கித் “தென்னர் பெருமானே! நுமது சீற்றந் தணிதல் வேண்டும்.; நமது மதுரைப்புறத்தே குதிரைத் திரள்வந்த தென்று தூதுவர் வந்து கூறினார்” என்றுரைப்ப, அம்மன்னனுங் குதிரைகளின் வரவை எதிர்நோக்கித், தெருவின்கண்ணதோர் அழகிய மண்டபத்தில் வந்து வைகினான். வைகி நெடுநேரங் காத்திருந்தும், இறைவனது திருவிளையாட்டாற் பரிகள் வந்தில, அதனால், அரசன் மனம் புழுங்கி ஒற்றரை ஏவ, அவரும் மதுரைப் புறத்தே நாற்பாலுஞ் சென்றுநோக்கி மீண்டு ‘பரிகளின் வரவை எப்பக்கத்துங் காண்கிலேம்' என்று கூறினார். அச்சொற் கேட்ட மன்னன் வஞ்சினம் மிக்கு ஐயகோ! நமக்கு நல்ல அமைச்சன் வாய்த்தான்! நம் பொருளையெல்லாம் எடுத்துச் சென்று வீணே அழித்ததல்லாமலும், 'வென்றி மிக்க குதிரைகள் இப்போது வரும்! இதோ வந்தன! எனவும் பொய்த்து உரையாடா நின்றான். குறும்பனாகிய இவ்வமைச்சனை ஊர்க்குட் காண்டுபோய் நிறுத்திப் புளிய மிலாறுகளால் இவனை முதுகின்மேல் அடித்துத் துன்புறுத்துமின்கள்! அங்ஙனஞ் செய்தற்கு நீவிர் அஞ்சிக் கூசாதீர்கள்! இது நீவிர் அரசற்குச் செய்ய வேண்டி கடமையாம்” என்று கூறிவிடுப்ப, அவர்களும் அங்ஙனமே அடிகளை ஈர்த்துப் போய் அவரை அடிப்ப

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/113&oldid=1587559" இலிருந்து மீள்விக்கப்பட்டது