உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1 18

79

தண்டற்காரர்களை ஏவி அவரைச் சிறையில் அடைப்பித்துப் பலவாற்றானும் வருத்தியது திருவாதவூரிலேயா மென்பதும் நம்பியார் திருவிளையாடலை உற்றுநோக்குதலாற் புலப்படு கின்றன. குதிரைத்திரளை நடாத்திவந்த பெருமானோ வாதவூர்ப் புறமாய்ப்போந்து, தமது திருவடிச் சிலம்பின் ஒலியை எழுப்ப, அதனைச் சிறையிலிருந்தவாறே கேட்ட அடிகள் “ஈதென்னையாண்ட எம்பெருமான் திருச்சிலம் போசையே யாம்” எனத் தெளிந்து இறைவனை வழுத்தி, மதுரைக்கு ஒரு காதந் தொலைவில் உள்ள தமதூரின்கட் பரிகள் வந்தமை யறியாராய் அவை வருதலை வேண்டி அழுது குறையிரப்பா ரானார், இங்ஙனம் வருந்தா நின்ற அடிகளின் திருச்செவிகட்குப் புலனாகக், குதிரைமேல் வந்த பெருமான் தனது திருச்சிலம் போசை எழுப்பிய அருட்டிறத்தை,

66

வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்

9914

என்று அடிகளே அருளிச் செய்திருத்தல் காண்க.

அடிக்குறிப்புகள்

1.

கீர்த்தித் திருவதவல், (27, 28)

2.

திருவம்மா DIT 6060T, (20)

3.

குயிற்பத்து, (7)

4.

திருவார்த்தை, (4)

5.

திருவார்த்தை, (10)

6.

பண்டாய நான்மறை, (2)

7.

பண்டாய நான்மறை, (3)

8.

ஆனந்த மாலை, (7)

9.

கீர்த்தித் திருவகவல், (25, 26)

10.

திருவேசறவு, (1)

11.

திருவேசறவு, (1)

12.

13.

14.

திருப்பொனூஞ்சல், (8)

திருப்பாண்டிப் பதிகம், (1)

கீர்த்தித் திருவகவல், (52, 53)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/112&oldid=1587558" இலிருந்து மீள்விக்கப்பட்டது