உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் 22

“நரியைக் குதிரைப் பரியாக்கி

ஞாலமெல்லாம் நிகழவித்துப்

பெரிய தென்னன் மதுரையெல்லாம்

பிச்சதேற்றும் பெருந்துறை யான்”

என்று அடிகளே ஓதுமாற்றால் உண்மையாதல் தெளியப் படும்.

நரிகளின் ஊளையொலியும், காவலர்

அவற்றை

வெருட்டும் ஒலியும், நகரமாந்தர் துயில்நீங்கி எழுந்து அச்சத்தாலிடுங் கூக்குரலொலியும் ஒருங்குசேர்ந்து பேரிரைச்சலை விளைக்கவே பாண்டிய மன்னனுந் துயிலி னின்று திடுக்கிட்டெழுந்து அவ்விரைச்சல் நிகழ்தற்கு ஏது வன்னையென்று தன் மெய்க்காப்பாளரையும் வாயில் காவலரையும் வினவாநிற்கப், பரித்துறைக் காவலரிற் சிலரும் விரைந்து வந்து அவனை வணங்கி, "நேற்றுவந்த புதுப் பரிகளெல்லாம் இன்றிரவின் நடுயாமத்தில் நரிகளாக மாறிப் பழம்பரிகளையுங் கொன்று பிடுங்கித்தின்று கூட்டங் கூட்டமாய் ஊளையிட்டுக் கொண்டு ஊரெங்கும் உலவா நின்றன” என்று அவ்வகைகளையெல்லாம் விரித்துச் சொல்லி முறையிட்டார். அச் சொற் கேட்ட மன்னவன் இடிமுழக்கங் கேட்ட அரவென மனம் மடிந்து ஆற்றொணாத் துயரமும், அதனூடேயூடே, ‘பரிகள் நரிகளானவாறு யாங்ஙனம்!' என வியப்புங் கொள்வானானன். சிவபிரான் தன் மெய்யடியார் பொருட்டுச் செய்யும் அருட்டிறங்களையும், அவற்றை அவனாற் செய்வித்துக்கொள்ளும் மெய்யடியார் உண்மை களையும் அறியமாட்டாத அப் பாண்டிய மன்னன்,

.

“இத்தகைய மாயஞ் செய்தற்கு வாதவூரன் இந்திரசாலங் கற்றவனா யிருத்தல் வேண்டும் நாம் தந்த பொருட்டிரளை யெல்லாம் வீணே செலவிட்டு, அவற்றிற்கு ஈடுகட்டுவான் போல் நரிகளையெல்லாம் பரிகளாக உருமாற்றிக் கொணர் வித்து நம்பால் ஒப்படைத்தான்!' என்று தன்னுள்ளே எண்ணிச் சீற்றங் கொண்டான்!' தனாலும், இவன் வெள்ளை நீறு மெய்யிற் கண்டு, கள்ளன் கையிற் கட்டு அவிழ்ப்பித்த” வரகுண பாண்டிய மன்னன் ஆகான் என்பது பின்னும் வற்புறுத்தப்படுதல் காண்க.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/121&oldid=1587567" இலிருந்து மீள்விக்கப்பட்டது