உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

89

ன்

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1 இவ்வாறு பாண்டியன் சீற்றமுந் துயரமும் வியப்புங் கொண்டிருக்கையில் புலரிக்காலம் வந்தது; பகலவன் த அலர்கதிர்களைப் பரப்பிக்கொண்டு கீழ்பாலிற் செம் பொற்றிரளைப்போற் றோன்றினான். திருவாதவூரடிகள் செய்கடன்கள் கழிப்பிப், பாண்டியனைக் காண்டற்குத் தமது வாதவூரினின்றும் புறப்பட்டுச் சிவிகையூர்ந்து வந்தார். வந்து அரண்மனை புகுந்து பாண்டிய அரசனை வணங்கி அவனது முகத்தை நோக்கினவர், அது தழலிடைப்பட்ட தாமரைப்போல் வாடியிருக்கக் கண்டு, “பெருமானே! வாடியிருப்ப தென்னை?” என்று வினவினார்.

அதற்கவன் சினநகை புரிந்து, "நீ நல்ல அறிவுடை அமைச்சன்! தேடிப்பார்த்தால் உன்னையொப்பார் யாவர்! நல்ல பரிகள் கொண்டுவந்தனை! நீ தேடிச் செய்த அருமை சிறிதோ! பொல்லாங்கும் வேறுண்டோ!" என்று கடுகடுப் போடு கூறினான். அதுகேட்ட அடிகள் துணுக்குற்று, "வேந்தர் பெருமானே! சிறந்தனவாக ஆராய்ந்து தெரிந்தெடுத்துக் கொணர்வித்த குதிரைகளுள் ஏதேனும் பழுதுண்டோ? நேற்று அவைகளை ஒவ்வோரினமாய்ப் பிரித்துணர்ந்து அறிஞர் முன்னிலையில் அகமகிழ்ந்து கைக்கொண்டீரன்றோ?” என்று வினவினார். அச்சொற்களைச் செவிமடுத்த மன்னன் நெருப்பில் நெய் சொரிந்தாலொப்ப மேன்மேற் சினங்கிளர்ந்து “நெஞ்சம் அஞ்சாமல் என்னை யணைந்து இவற்றைக் கூறுகின்றனையோ? நேற்று நீ காணர்வித்த பரிகளெல்லாம் நரிகளாகி முன்னமேயுள்ள எம்முடைய குதிரைகளையுங் கொன்று பிணமாக்கி ஊளையிட்டுத் திரிகின்ற செய்தியைப் பித்தா, நீ உணர்ந்திலையோ! ஆசிரியர்மாட்டும் அரசரிடத்தும் தூய அருளாளர் பாலும் அன்பிற்சிறந்த தோழர் மாட்டும் அருந்தவத்தோரிடத்தும் நெஞ்சம் அஞ்சாமற் கரவு செய்வோர்க்குக் கொலையல்லாது வேறு செய்யத் தக்கதோர் ஒறுத்தல் உண்டோ! நரிகளையெல்லாம் பரிகளாக்குவித்து அழைத்து எம்முடைய குதிரைப்பந்திகளிற் கட்டுவித்தாய்! அறிவை மயக்கி இந்திரசாலஞ் செய்வது எம்மிடத்திலேயோ! வேந்தர்க்குரிய

ம்

பொற்றிரளை அழிப்போர் தாமோ வீ டுபேற்றினையடையும் நல்லோர்! மாவேறிக் காட்டிய குதிரைச் சேவகன் எங்கே? அவனுடன் போந்த சாத்தவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/122&oldid=1587568" இலிருந்து மீள்விக்கப்பட்டது