உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

  • மறைமலையம்

22

எங்கே! நீ மறைநூல்கள் ஓதினமை யெல்லாம் இங்ஙனம் செய்தற்குத்தானோ! நின்னுடம்பினை வருத்தி ஒறுத்தலே செயற்பாலது,” என்று கொடுஞ் சொற்களை வாரி இறைத்துக், கூற்றினுங் கொடியரான தண்டக்காரர்களை க்காரர்களை விளித்து, இவனைக் கொண்டுபோய்ச் சிறையிலிட்டு வளைத்து, இவன் நமக்குத் தரவேண்டும் பொருள்களையெல்லாம் வாங்கு மின்கள்!” என்று ஏவினாள்.

66

அவர்களும் அங்ஙனமே செய்தற்கு அவரை அழைத்துச் சன்றவர்கள் அவரது பேரன்பின் நிறத்தைக்கண்டு உள்ளம் உருகி, அவரது உடம்பினை வருத்துதற்கு மனம் இசையாராய், அவரை ஓறாமல் விடினும், அரசன் தமக்குத் தீங்குபுரிவானென உன்னி அச்சத்தால், அவரைச் சிறையில் அடைத்து வளைத்து வைத்தார்கள். இவ்வாறு சிறையில் வளைத்துவைக்கப்பட்ட அடிகள் அத் துன்பம் பொறுக்க மாட்டாமற் “பாருருவாய பிறப்பற வேண்டும்?” என்பதனை முதலாகவுடைய எண்ணப் பதிகம் அருளிச்செய்து அழுது குறையிரந்திருக்கலாமென்று கருதற்கு இடமிருக்கின்றது திருப்புலம்பலும் இந்நேரத்தில் அருளிச்செய்ததா யிருக்கலா மேனும், அதன் முதற் செய்யுளில் திருவாரூர் குறிக்கப் பட்டிருத்தலால், அஃது அத்திருக் கோயிலை வணங்குதற்கு அடிகள் சென்றபோது அருளிச் செய் சய்ததா யிருக்கலாமோ என்று ஐயுறுதற்கும் இடஞ் செய்கின்றது. மற்றொரு நேரத்தில் அவர் அருளிச்செய்தது "இரும்புதரு மனத்தேனை” என்னுஞ் செய்யுளை முதலாக வுடைய திருவேசறவே என்று நம்பியார் திருவிளையாடல் உரைக்கு மேல் பதிகம் அப் பதிகத்தின்கண் அடிகள் தாம் துன்புறுவதனைக் கூறாமல், தாம் துன்பங்கள் பலவற்றிற்கு ஆண் L வன் நல் வருளாற் றப்பிப் பிழைத்தமையினையும், ஆண்டவர் தம்மை ‘அஞ்சேல்' என்று ஆண்ட திறத்தினையுமே, “நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால்

உய்ஞ்சேன்எம் பெருமானே யுடையானே அடியேனை அஞ்சேல்என்று ஆண்டவா றன்றே.”

என்றாற்போல அத்திருப்பதிகத்தில் அடுத்தடுத்து ஓது தலானும், அதன் ஒன்பதாஞ் செய்யுளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/123&oldid=1587569" இலிருந்து மீள்விக்கப்பட்டது