உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

“அருள் எனக்கு இங்கு இடைமருதே

இடங்கொண்ட அம்மானே"

1

91

எனத் திருவிடைமருதூரைக் கிளந்து கூறுதலானும் அப் பதிகம் இந் நேரத்தில் அருளிச்செய்யப்படாமல், அடிகள் மதுரையையும் அமைச்சுரிமையையும் விட்டகன்று திருவிடை மருதூர்க்குச் சென்றபோது அருளிச் செய்யப்பட்ட

தாகுமென்பதே தேற்றமாம்.

இனி, அரசனேவலால் அவன் தண்டற்காரர் அடிகளைக் கொண்டுபோய்ச் சிறையிலிட்டு வளைத்து வைத்தாரென்று நம்பியார் திருவிளையாடல் கூறுமேனும், அடிகளின் துயர் நீக்கும்பொருட்டு இறைவன் வைகையாற்றிற் பெருவெள்ளத்தைப் பெருகவிட்ட பின்நிகழ்ச்சியை ஆராய்ந்து காணுமிடத்து அரசன்றன் ஏவலர் அடிகளைக் கொண்டு போய் வைகையாற்று மணலில் நண்பகற்போதிற் கடுவெயிலிற் நிறுத்தி, அவரது அருமைத் திருமேனியை வளைத்து முதுகின்மேல் கருங்கல்லை ஏற்றிவைத்து வருத்தினாராதல் வேண்டுமென்பதே கருதற் பாலாதா யிருக்கின்றது. இத்தகைய பொல்லாக் கொடுந்துன்பத்தைப் பொறாமல் அடிகள் நைந்தழுது புலம்புதலைக் கண்ட எல்லாம்வல்ல சிவபிரான் மிக இரங்கித் தன்றிருவருளாணையால் உலகினைக் கெடுப்பதும் எடுப்பதுஞ் செய்யும் முகிற்குழாங்களை நினைந்து அவை பருமழை பொழிகவெனத் திருவுளத்தெண்ணினான். எண்ணுதலும் அளவுக்கு மிஞ்சிய பெருமழை அன்றைக்குப் பொழிந்தது.

இங்கொன்று ஆராயற்பாற்று சித்திரை வைகாசி ஆனி, ஆடி என்னும் நான்கு திங்களுமே கதிரவன் கடுவெயில் எறிக்கும் வேனிற்காலமாம். ஆவணித் திங்களோ கார்காலந் துவங்குங்காலமாம். அடிகள் மதுரைமாநகர்க்குக் குதிரை கொணர்வித்தது ஆவணித்திங்கள் மூலநாளிலேயாமென்பது நம்பியார் பரஞ்சோதியார் என்னும் இருவர் தம் திருவிளை யாடற் புராணங்கட்குந், திருவாதவூரர் புராணத்திற்கும் ஒப்பமுடிந்தது. ஆவணி மூலத்திற்கு அடுத்த நாளிலேயே பரிகளெல்லாம் நரிகளாகி மதுரைமாநகரைப் பித்தேறச் செய்தமையால், அன்றைக்கே பாண்டியன் அடிகளைத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/124&oldid=1587570" இலிருந்து மீள்விக்கப்பட்டது