உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

93

அவ்வரசன் உணர்வு தெளியப் பெறுவன் என்பதும், அவ்வாறு மழை பொழிவித்தற்கு ஏற்றதாக உலக இயற்கையில் தன்னால் வகுக்கப்பட்ட காலம் ஆவணித் திங்களே யாதலின் இந் நிகழ்ச்சிகட்கு இசைந்துவருமாறு குதிரைகளை அத் திங்களின் மூலநாளிலேயே கொண்டு செல்லல் வேண்டுமென்பதும் எல்லாம்வல்ல இறைவன் முன்னரே தன் றிருவுளத்தடைத்துக் கார்காலத்தின் கண்ணேயே அங்ஙனம் மழையை நிரம்பப் பெய்வித்துத் தான் கருதியதை முடித்தானென்க. அற்றேல், நரிகள் பரிகளாகவும், அப்பரிகள் திரும்ப நரிகளாகவும் உலக வியற்கை நிகழ்ச்சிக்கு மாறாய்ச் செய்து காட்டியதுபோலக், கார் மழை பெய்தற்கு ஏற்றதல்லாத வேனிற்காலத்தில் அது பொழியுமாறு செய்துகாட்டாதவா றென்னையெனின்; முதன் முறை இயற்கை நிகழ்ச்சிக்கு மாறாய்ச் செய்துகாட்டிய நரிபரி மாற்றத்தின் அருமையையே உய்த்துணரமாட்டாது அதனை இந்திரசாலமென இகழ்ந்து அடிகளை வருத்திய அப் பாண்டிய மன்னனுக்கு மேலும் அங்ஙனம் ஒன்று செய்து காட்டுதலாற் போதரும் பயன் ஒன்றின்மையானும், தன்னடியாரைக் காத்தலே இறைவன் றிருவுளக் குறிப்பாகலானும்,இரண்டாமுறை அவரைக் காத்தல் வேண்டி இயற்கை நிகழ்ச்சியோடு ஒப்பவே வைத்து மழையைப் பொழிவித்தானென்க. ஒன்றை இயற்கை நிகழ்ச்சி யோடு ஒவ்வாமல் வைத்துக் காட்டியது தன்னடியவரின் பருமை தோற்றுவித்து அவரைப் பாதுகாத்தற்கும், மற்றொன்றை அந் நிகழ்ச்சியோடு ஒப்பவைத்துக் காட்டியது முன்னையதால் உணர்வு தெளியப் பெறாத அம்மன்னனை ஒறுத்துத் தன்னடியவரைப் பாதுகாத்தற்குமேயா மென்க.

அல்லதூஉம், கீழ்கடற்கரை மருங்கேயுள்ள ஊர் களிற் கார்காலத்தில் மழை தப்பாது பெய்தல் போலக், கடற் கரையை மிக அகன்றிருக்கும் உள்நாடுகளில் அக்காலத்திலும் மழை தப்பாது பெய்தல் இல்லையாகும்; பாண்டிநாடு கீழ் கடற்கரைக்கு அருகிலில்லாமல் எட்டி உள்ளிடத்தில் அதன்கட் கார் காலத்தில் மழைபெய்யாது போதலும் அதனால் அந் நாட்டில் அடுத் தடுத்து வற்கடம் உண்டாதலும் பழைய நூல்களாலும் உலகத்தார் உரையானும் அறியப்பட்டனவேயாம். இந் நிகழ்ச்சி யுண்டான அப் பழையகாலத்திலுங் கூட மதுரைமா நகரத்திலும்

இருப்பதொன்றாகையால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/126&oldid=1587572" இலிருந்து மீள்விக்கப்பட்டது