உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • மறைமலையம் - 22

அதனைச் சூழ்ந்த இடங்களிலும் வேனிற்கால வெப்பந் தணியாமல் அஃது ஆவணித் திங்கள் முற்றுந் தொடர்ந் திருந்தமையாலன்றோ பாண்டியன் ஏவலாட்கள் அடிகளை அக்கடுவெயிலிற் கொண்டுபோய் நிறுத்திவைத்து நலிவ ராயினர். அங்ஙனம் மழைபெய்தல் அரிதாய அவ்வாவணித் திங்களில் அடிகளை அவர் வருத்திய அன்றைக்கு அளவு படாப் பெருமழை பொழிந்து வைகையாறும் உடைப் பெடுத்ததாயின், அஃது அடிகளைக் காத்தற்பொருட்டாகவே இறைவன் ஆணையால் நிகழ்ந்த புதுமையாமென்றே கொள்ளற் பாற்று.

அவ்வாறு கொள்ளாம், இயற்கையாய் நிகழ்ந்த அந் நிகழ்ச்சியே அடிகளைக் காத்தற்கும் உதவியாயினது 'காக்கை ஏறப் பனம்பழம் வீழ்ந்த’ நிகழ்ச்சியோ டொப்பதே யாமெனின்; அடிகளின் பொறுத்தற்கரிய துன்பத்தைப் போக்குதற்கு இன்றியமையாததான அந் நேரத்தில் அம் மழை பொழியுமாறு தொடர்பு படுத்தியது கடவுட் செயலே யல்லாமற் பிறிதென்னை? ஒரு பேரரறிவின் செயலால் உந்தப்படாமல் அறிவில்லா மழை தானாகவே அந்நேரத்திற் பெய்ததென்று உரைக்கும் அறிவில்லா வழக்குப் பயனுடையதோ, தன்னடி யாரைக் காக்கும் பொருட்டு முற்றறிவுடைய ஒரு முழுமுதற் பொருளால் ஏவப்பட்டு அஃது அந் நேரத்திற் பெய்ததென் றுரைக்கும் அறிவுடை வழக்குப் பயனுடையதோ என்று ஆராய்ந்து பார்க்கவல்ல நுண்ணறிவுடையார்க்கு, எல்லா அறிவுமுடைய இறைவனருளாற் செலுத்தப்பட்டு அஃது அங்ஙனம் பெய்ததெனக் கொள்ளுதலே வாய்ப்புடைத் தாய்த் தோன்றும். எல்லா அறிவும் ஆற்றலும் உடைய ஒரு கடவுளின் றிருவருளால் உலகமும் உலகத்து நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன வெனக் கூறுதல் தமது அறிவுக்குப் பெருமையாகா தென்று கருதி, எல்லாம் அறிவின்றி இயற்கையாகவே இயங்கு கின்றனவென்று அறியாமைக்கே ஏற்றஞ்சொல்லி மகிழ்வோர் தம்மை ஒருவர் ‘அறிவில்லாதவர்' எனவும், ‘தாம் செய்வன வெல்லாம் அறிவின்மையேயாம்' எனவுங் கூறியக்கால் அச் சொற்கேட்டு வருந்துதல் என்னையோ? அதனால், அறியாமைக்கு ஏற்றஞ் சொல்லும் அவரது உள்ளமே அவர்தம் கொள்கைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/127&oldid=1587573" இலிருந்து மீள்விக்கப்பட்டது