உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

8. பாண்டியன்

பிழைபொறுக்க வேண்டுதல்

இனிச், சிவபெருமான் கடவுளர்க்குங் காட்டாத தனது அருமைத் திருவுருவைத் தம்பொருட்டுக் காட்டித் திருமேனிமிசை அடியும் உண்ட பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து அடிகள் பெரிதும் ஆற்றாராய் அக்கரைமேற் புரண்டு புரண்டு அலறுதலைக் கண்ட பாண்டியன் நெஞ்சம் நெக்குருகி, உள்ளம் பொறானாய் அவர்திரு முன்னர்ப்போந்து கீழ்விழுந்து வணங்கி, “வாதவூர் வந்த வள்ளற் பெருமானே! தேவரீர் தமியனேற்கு அமைச்சராய் வந்தருளியது எல்லாம்வல்ல சிவபிரான் பரிமீது எழுந்தருளி வந்து ஒன்றுக்கும் பற்றாத புழுத்தலை நாயினேனுக்குந் தனது அருமைத் திருக் கோலத்தைக் காட்டி என்னைப் பிணித்த அறியாமைக் கட்டை அறுத்தற்கேயன்றோ! மறைத்தவக் கொழுந்தே! அன்பின் கனியே! எனது கரு மாளக் காட்டிய அத் திருக்கோலத்தின் அருமையுணராதே பேயனேன் புல்லிய ஆடையொன்றும் எம்பெருமானுக்கு அளித்துப் பிழை செய்தேனே! எம் பருமானை ஏவல்கொண்ட பேரன்பின் பெற்றியை அறியாமே, தீவினைக் கேதுவாகிய செல்வப் பொருளை வேண்டித் தேவரீர் திருமேனியையும் வருந்தச் செய்த கொடியனேன் சிறுமையாற் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருள்வீரோ! அன்பின் விளக்கே! ஆண்டவனே! முழுமுதற் கடவுளாகிய ஐயன் தூமுடிமேல் மண்ணுஞ் சுமந்து பொல்லாப் பாவியேனது கொடுவினைக் கையால் அடியும்பட்டது தேவரீர் பொருட்டு என்னும் புகழ் ஒன்றுமே தேவரீர்க்குப் போதுமே! இந் நிலத்தை ளும் அரசு தேவரீர்தேயாக அடியேன் தேவரீருக்கு நாளும்

அடிகளின் மெய்த்தவப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/138&oldid=1587584" இலிருந்து மீள்விக்கப்பட்டது