உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

9. புத்தரொடு சொற்பேர் தொடங்குதல்

ஈதிவ்வாறிருக்கச், சிவபிரான் திருவடிக்கண் இடையறா அன்புபெருகுந் திருத்தவம் உடையார் ஒருவர், சோழநாட்டின்கண் உள்ள தில்லை முதலான திருக்கோயில் களைத் தொழுதானபின், பழுதில்லா ஈழநாட்டின்கண் உள்ள திருக்கேதீச்சரம் திருக்கோணமலை முதலான திருக்கோயில் களையும் வணங்கல் வேண்டி அங்கே சென்றார். சென்றவர் அங்கே செல்லும் இடங்கடோறும் 'பொன்னம்பலம்' 'பொன்னம்பலம்' என்றே சொல்லிக்கொண்டு செல்வாரானார். அக்காலத்தே இலங்கைத் தீவானது பௌத்த சமயத்தவனான ஓர் அரசன் ஆளுகைக்குள் இருந்தது. பௌத்தசமயத்தைத் தழுவின குடிமக்களும அந் நாடெங்கும் பரவியிருந்தனர். அப் பௌத்த சமயத்தவர்களிடையே அச் சிவனடியார் 'பொன்னம்பலம்' என்னுஞ் சொல்லை ஓவாது உரைத்த படியாய்ச் செல்லவே, அவரது சிவவடிவத்தைக் கண்டும், அவர் கூறும் 'பொன்னம்பலம்' என்னுஞ் சொல்லைக் கேட்டும் மனம் புழுங்கிய பௌத்தக் குருமார் சிலர் தம் அரசன்பாற் சென்று அக்குமாலை பூண்டு நீறுபூசி ஐயம் ஏற்று உண்பானாகிய சைவன் ஒருவன் நிற்கும்போதும் இருக்கும் போதும் எக்காலும் ‘பொன்னம்பலம்' என்று சொல்லியபடியாய் உலவு கின்றனன்,” என்று கூறினர். அச்சொற்கேட்ட அம் மன்னவன், "அவனை இங்கே கொணர்வீராக!" என்று தூதுவர்க்குக் கட்ட ளை தந்தான். அங்ஙனமே, அவர் சென்று அவ்வடியாரை அரசன்பால் அழைப்ப, அதற்கு அவர் “ஒன்றை வேண்டுதலும், மற்றொன்றை வெறுத்தலும் இன்றி நாடோறும் ஐயம் ஏற்று உண்டல் ஒன்றல்லது வேறேதுங் கருதாத எம்போல்வார் மாட்டும் அரசர்க்கு ஆவது ஏதும் உளதோ?" என்று

66

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/150&oldid=1587596" இலிருந்து மீள்விக்கப்பட்டது