உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

119

தோராயிரத்து அறுநூறுமுறை செப்பி உருவேற்றியதற்கு ஒப்பான பெரும்பயனைத் தரும்,” என்று மொழிந்திட்டார்.

ச் சொற்களை அரசனருகிருந்த புத்த குரு கேட்டுப் பெரிதும் வெகுண்டு, “பிடகநூல் மூன்றும் உரைசெய்த எம் தலைவனாகிய சாக்கியமுனிவ னல்லாது வேறுமொரு கடவுள் உண்டோ! இப்போதே யாம் தில்லைநகர் சேர்ந்து, அங்குள்ள சைவரொடு வழக்கிட்டு, அப் பொன்னம்பலத்தில் ஆடுங் கூத்தனது அடிகளிற் றொடுத்த கழலையும் மேலெடுத்த ஆனேற்றின் கொடியையும் அறுத்துப், புத்த முனிவன் ஒருவனே முழுமுதற் கடவுள் என உலகோர் அறிய உரைசெய்து, அம் மன்றத்தை அரசின் நீழற் பெருமானுக்குப் பள்ளியாக ஆக்குவேம். இச்செயலை மூன்று நாட்களில் முடிக்கக் கடவேம், என வஞ்சினம் புகன்று, தில்லைக்கேகத் தொடங்கினார். அப் புத்த அரசனுந் தன் மகட்குள்ள ஊமைத் தன்மையானது தில்லைப் பொன்னம்பலஞ் செல்ல நீங்குமெனக் கோணூல் க கூறினமை தெரிந்தானாகலின், தானுந் தன் மகளோடும் இலங்கைவிட்டும் புறப்பட்டு அத் தில்லைநகர் வந்து சேர்ந்தான்;

புத்தகுரு தில்லைத் திருக்கோயிலினுள்ளே தன்னரச னோடுஞ் சென்று ஒரு மண்டபத்தின்மீ தமர்ந்திருக்க, அதுகண்டு அக்கோயிலில் திருத்தொண்டு செய்வாரெல்லாம் அவர்பால் வந்து குழுமி, "ஓபுத்தகுருவே! நீர் இங்கிருத்தல் ஆகாது. இத் தில்லைநகர் எல்லையை உட னே கடந்து செல்லுதலே தக்கது,” என்று உரைப்ப, அதற்கு அப் புத்தகுரு, "சோழவேந்தன் முன்னிலையில் உயர்ந்த அளவை நெறியால், நீவிர் தழுவியொழுகும் சைவம் மெய்மையுடைத் தன்றென மறுத்து, எங்கள் கௌதமபுத்தரே முதற்கடவுள் என்பதை நிலை நிறுத்திய பின்னல்லது இதனைவிட்டு யாம் ஏகுவ தில்லை," என்று மறுமொழி கூறினார்.

இவ்வாறு புத்தகுரு கூறுதலைக்கேட்ட அக் கூட்டத் தினர் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றுங் கோயில் அந்தண ரிடத்தும், சைவநூலுணர்ச்சி யுடையாரிடத்தும் போய் நடந்தவைகளை எடுத்துச்சொல்ல, அவரெல்லாம் சினத் தோடும் அப்புத்தகுருவினருகே போந்து, “நீர் அச்சமின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/152&oldid=1587598" இலிருந்து மீள்விக்கப்பட்டது