உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

.

மறைமலையம் 22

இங்கே வந்தமை ஏன்?” என்று வினவ, அதற்கவர், “நுங்கள் சமய நூற்படி நுங்கள் கடவுளே முதற்கடவுள் என்று நீங்கள் நிலைநிறுத்துவீர்களாயின். அதனை மறுத்து, எமது சமய நூற்படி புத்தக்கடவுளே முதற்கடவுள் என்று நிலைநாட்டுவேம்; ஆதலால், எம்மோடு வழக்கிட வம்மின்கள்!” என்று அறைகூவி அழைத்தார். அதன்மேற் சினங்கொண்டு அக் குருவை வைத அந்தணர்கள் பிறகு தெளிவடைந்து, புத்தன் வினா வியவற்றிற்கு விடைகூற அறியாமல் அவனை வைதார் அடித்தார் என்று உலகம் நம்மைப் பழிக்கும்; ஆதலாற் சோழ வேந்தன் முன்னிலையில் ஒரு பேரவை கூட்டி யாம் வழக்கிட்டால் தக்கதிது, தகாததிது வென்று ஏதொரு கலகமும் நடவாமல் முடிக்கலாம்,” என்று தம்முள் ஒரு தீர்மானத்துக்கு வந்து, பின்னர், நிகழ்ந்தவைகளையும் தமது தீர்மானத்தையும் விரித்தெழுதிச் சோழ மன்னனுக்கு ஒரு திருமுகமும், இங்ஙனமே தென்றமிழ் நாட்டிலுள்ள ஏனை மன்னர்க்கும் கற்றார்க்கும் அருந்தவத்தோர்க்கும் பலப்பல திருமுகங்களும் போக்கித், தத்தம் மனையகத்தே சென்று, அன்றிரவு, பெரியதொரு மனக்கவலையோடுந் துயில் கொள்ளலானார்.

L

அவ்வாறு அவரெல்லாம் துயில்கையில், அவரெல் லார்க்குங் கனவின் கண்ணே, தழைத்த சடைமுடியும் நீறு பொலிந்த திருமேனியும் பிரப்பங்கோல் தாங்கிய கையும் உடைய அழகிய ஓர் அருந்தவர் உருவந்தோன்றலாயிற்று; தோன்றிய அத் திருவுருவம் வாய் திறந்து, “நீவிர் மனங் கலங்குதல் ஒழிமின்! இவ்வூர் எல்லைப்புறத்தே வாதவூரன் என்னும் ஒரு முனிவன் அருந்தவத்தில் அமர்ந்திருக் கின்றான்; அம் முனிவனை அழைத்துவருவீரேல் அவன் அளவை நூன்முறை வழுவாதே புத்தரோடு வழக்கிட்டு அவரை வெல்வான், வல்வான்," என்று உரைத்து மறைந்து போயிற்று.

வியக்கத்தக்க வகையாய் நிகழ்ந்த இக் கனவு கண்டு விழித்த அந்தணர் எல்லாம் இறைவனைத் தொழுதெழுந்து, புலரிக் காலையிலே கோயிலில் ஒரு மண்டபத்தே வந்துகூடித் தாங்தாங் கண்ட கனவு நிகழ்ச்சியினை எடுத்துக்கூறித், தம் மெல்லார்க்குந் தோன்றிய திருவுருவமும் அஃது உரைத்தனவும் முற்றும் ஒத்திருத்தல் கண்டு மிக வியப்புற்று, ஐயனருளை வாழ்த்தி மனக்கலக்கந் தீர்ந்து, எல்லாருமாய் ஒருங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/153&oldid=1587600" இலிருந்து மீள்விக்கப்பட்டது