உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் 22

லக்கணமும், அக் கடவுளின் கடவுளின் திருவடியைச் சேரும் வீட்டினிலக்கணமும் நீவிர் எடுத்துரைமின்!” என்று கூறினார்.

அதற்கு அப் புத்தகுரு, “எல்லாவற்றையும் முற்றும் அறிந்து, கொலை களவு பொய் கள் காமம் என்னும் ஐவகைக் குற்றமுங் கடிந்து, பழுதில்லா அருட்பெருந்தன்மை யினாலே பல பிறவிகளிலும் பிறந்த அவ்வவ்வுயிர்த் துன்பமும் பொறானாய் அத் துன்பங்களைத் தான் ஏன்று கொண்டு அவற்றிற்கு நன்மை செய்து, விநயபிடகம் சத்தபிடகம் அபி தன்மபிடகம் என்னும் வழுவில்லாத மூன்று ஆகமங்களையும் அருளிச்செய்து அரசமரநீழலில் எழுந்தருளியிருக்கும் புத்த முனிவனே எம் இறைவனாவான் என்று அறிமின்! இனி, உருவம் வேதனை குறிப்புப் பாவனை விஞ்ஞானம் என்னும் ஐவகைக் கந்தகமும் ஒருங்கு தொக்கதொகையே உடம்பும் உயிரும் ஆவதன்றி, வையைந்தின் வேறாக உடம்பும் உயிரும் எனத் தனித்து இரு பொருள்கள் இல்லை. இக் கந்தங்களுள் எதுவும் உயிரன்று என்பது எம்முடைய பிடகநூல்களில் மறித்தும் மறித்தும் வற் புறுத்தப்படுகின்றது. உடம்பும் உடம்பும் ஏனைப் பொருள்களும் இடையறாது மாறிக் காண்டே யிருக்கின்றன. கணத்திருந்த அதே ஆண்மகன் பிற்கணத்து அல்லன்; அவனிடத்தில் என்றும் நிலைபேறாய் உள்ளது எதுவும் இல்லை. இவ்வைவகைக் கந்தங்களும் ஒருங்கு தொக்கவழி ‘யான் ஒருவன் உளன்' என்னும் உணர்ச்சி தோன்றா நிற்கின்றது. இவ்வைந்துங் கூடிய தொகை அழிந்தவழி ‘யான் உளன்' என்னும் உணர்வும் அழியா நிற்கும். இவ் வைந்தின் கூட்டமுங் கலைவும் அறியா திருக்குங்காறும் னையாற் பிறவியுளதாம்; அவை யுணர்ந்தவழி மெய்யுணர்வு தோன்றிப் பிறவி இல்லையாம்; இதுவே வீடுபேறாம் என்று தெளிமின்! இனி, இங்ஙனம் இவை எல்லாவற்றிற்கும் முதலாகிய உருவம் வேதனை குறிப்புப் பாவனை விஞ்ஞானம் என்னுங் கந்தங்களைந்தும் யாவையென்பிரேல், அவை தம்மை யும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுதும்: உருவக் கந்தமாவ து பொருள்களின் உருவும் அப் பொருட் பண்புகளின் உருவும் என இருவகைத்தாய் ஒவ்வொன்றும் நந்நான்காம்; பொருள்களின்

முற்

உள்ளவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/155&oldid=1587602" இலிருந்து மீள்விக்கப்பட்டது