உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

123

உரு; மண் புனல் அனல் கால் என நான்காம்; அப்பொருட் பண்புகளின் உரு: வன்மை சுவை ஒளி நாற்றம் என நான்காம்; வேதனைக் கந்தமாவது இன்பமுந் துன்பமும் அவ்விரண்டும் இன்மையும் என மூன்றாம்; குறிப்புக் கந்தமாவது மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளும் அவற்றைப் பொருந்தி நிற்கும் மனமும் என ஆறாம். பாவனைக் கந்தமாவது, மனம் மொழி மெய் என்னும் மூன்றையும் பற்றி நிகழும் நல்வினை பத்தும் தீவினை பத்துமென இருபதாம், அவற்றுள் நல்வினை பத்தாவன; அருள் அவாவின்மை தவ விருப்பம் என மனத்தான் நிகழும் மூன்றும், இனியவை கூறல் மெய்ம்மை கூறல் பயனுளகூறல் அறமுரைத்தல் என மொழியான் நிகழும் நான்கும், வணக்கம் ஈகை தவம்புரிதல் என மெய்யாண் நிகழும் மூன்றும் ஆம்; தீவினை பத்தாவன: தீயன நினைத்தல் அவா வெகுளி என மனத்தான் நிகழும் மூன்றும், கடுஞ்சொல் பொய்கூறல் பயனில சொல்லல் கோட்சொல்லல் என மொழியான் நிகழும் நான்கும், களவு கொலை வீண் செய்கை என மெய்யான் நிகழும் ஆம். விஞ்ஞான கந்தமாவது ம் ஐம் ம்பொறிகளையும் மனத்தையும் பற்றி நிகழும் ஆறறிவு களாம் என்று இவ்வாறு உணர்ந்து கொண்மின்!” என்று விடை கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/156&oldid=1587603" இலிருந்து மீள்விக்கப்பட்டது