உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

10. புத்த சமயக் கோட்பாடுகளை மறுத்தல்

அதன்மேல் திருவாதவூரடிகள் அப்

66

புத்தகுரு

பிற்

கூறியவைகளை நிரலே மறுப்பாராய் பின்வருமாறு உரை நிகழ்த்துவாரானார்; முற்கணத்தில் இருந்தது கணத்தில் இல்லையாம் என்பதே நுமது கோட்பாடா தலால், நும் புத்தமுனிவன் ஒருகணத்தில் அறிந்த அறிவும் அதற்கு அடுத்த கணத்தில் இல்லையாம் என்றே நுமது கோட்பாட்டின்படி முடிக்கப்படும்; அவ்வாறு முடிக்கப் படவே, முற்கணத்து நிகழ்ந்த அறிவு மாய்ந்து போகப் போகப் பிற்கணத்து அவன் புதிது புதிதாக அறிதலே நிகழாநிற்கும். அதனால் அவற்கு நிகழ்கால அறிவே தோன்றித் தோன்றி மாயுமல்லது, இறந்தகால அறிவும் அக் காலத்து நிகழ் பொருளினறிவும் அவற்கு இலவாதல் வேண்டும். அல்லதூஉம், ஒருகணத்து மட்டுமே நிகழும் அறிவு அதன் பிற்கணங்களில் நிகழ்வனவற்றை அறியாத தாகல் வேண்டும்; அங்ஙனம் அறியாதாகவே அவற்கு வருங்கால அறிவும் இலதாதல் பெறப்படும். இனிக் கணங்கடோறுந் தோன்றும் நிகழ் காலவறிவும் நிலைபேறின்றி மாய்ந்தொழிதலின் அவ்வறிவு நிகழ்ச்சியாற் போந்த பயனும் ஒன்றும் இன்றாம். இங்ஙனம் முக்கால அறிவு நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்ப்பாடு நுமது கொள்கையின்கண் இன்மையின், நும் புத்தமுனிவன் எல்லா வற்றையும் ஒரு ங் குணர்வன் என்பது பொருள்இல் கூற்றேயாம். 'நேற்று இதனைச் செய்தவன் யானே' என இறந்த காலவுணர்வும், 'இன்று தனைச் செய்கின்றேன்’ என நிகழ்கால உணர்வும், 'நாளை இதனைச் செய்து முடிப்பேன்’ என எதிர்கால வுணர்வும், ஒரு தொடர்பாக நிகழப்பெறும் மக்களுக்குள்ள அத்துணை யறிவுதானும் நுமது கடவுளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/157&oldid=1587604" இலிருந்து மீள்விக்கப்பட்டது