உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

18

125

இன்மையின், அஃது எல்லா அறிவும் முதன்மையும் உடைய முழுமுதற்கடவுளாதல் யாண்டையதென்றொழிக!

துன்பம்

அவ் வலையிற் சென்று

"இனி, நும் றைவன் பிறவுயிர்களின் பொறானாய் அவ் வுயிர்களின் துன்பத்தைத் தான் ஏன்று காள்ளல் வேண்டித் தான் பல்லுயிர்களாய்ப் பிறவி யெடுப்பனென்றதூஉம், அவன் கொலை முதலாய குற்றங்கள் கடிந்தோ னென்றதூஉம் பொருந்தாமை காட்டுவாம். ஒருயிர்க்கு வந்த துன்பத்தை நீக்கலுறுவோன் தான் அத்துன்பத்திற் பற்றப்படாதவனாய் இருந்தாலன்றி அத்துன்பத்தை நீக்க 5 ! மாட்டுவான் அல்லன். கண்ணிழந்த ஒரு குருடனுக்கு உதவி செய்யவல்லவன், கட்பார்வை நன்குடைய மற்றொருவனே யல்லாமல் அவன்போற் கண்ணில்லாத வேறு ஒரு குருடன் அல்லனே. அவ்வாறிருக்கப் பிறவித்துன்பத்திற் கிடந்துழலும் உயிர்களின் துன்பத்தைத் துடைக்கல் வேண்டி நுமது கடவுளும் அவ்வுயிர்களைப்போற் பல பிறவிகளை யெடுத்தானென்று நும்மனோர் கூறுவது, வலையில் அகப்பட்டுத் துடிக்கும் பல மான்களைக் கண்ட மற்றொருமான் அவற்றின் துன்பத்தை நீக்குதற்பொருட்டுத் தானும் அகப்பட்டுக்கொண்டதனையே ஒக்கும். அற்றன்று, உயிர்கள், தம்மையறியாமலே பிறவிகளிற் கிடந்துழன்று துன்புறும், எம் புத்தமுனிவனோ தன்னுணர்வும் தன்வலிமையும் முற்றும் உடையனாய் அவ்வுயிர்களி னிடையே பிறந்து அவற்றின் துன்பத்தைப் போக்குவான் என்றுரைப்பிரேல், அவ்வாறு எல்லா அறிவும் ஆற்றலும் உடையான் அவ்வுயிர்கள்போற் பிறவியெடாமலே அவற்றின் துயர் களைய வல்லனாதல் வேண்டுமன்றி, அவர்போற் றானும் பிறவி யடுத்துழலல் எற்றுக்கு? மேலும், வினைநுகர்ச்சியின் பொருட்டாகவே பிறவி வருமென்பது நும்மனோர்க்கும் உடன்பாடாகலின், பிறவி யெடுத்த உயிர்களுள் ஒன்றாய் நிற்கும் நும் புத்தமுனிவனை அவ்வினையின் நீங்கிய இறைவனாகக் கோடல் யாங்ஙனம்? னையிலும் பிறவியிலுங் கூடி நிற்பனாயினும் எம் புத்த முனிவன் எல்லாம்வல்ல றைவனே யாவன் என்று பொருந்தாவழக்குப் பேசுவீராயின், அங்ஙனமே வினையிலும் பிறவியிலுங் கூடிநிற்கும் ஒவ்வோருயிரையும் இறைவனாகக் கொள்வோம் என்பார்க்கு நீர் விடைபகருமாறு இன்றாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/158&oldid=1587605" இலிருந்து மீள்விக்கப்பட்டது