உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

66

  • மறைமலையம்

22

ன்றாகவே, நும் புத்தமுனிவன் உயிர்களுள் ஒருவ னே யாவனல்லால், அவன் முதற்கடவுளாதல் சல்லா தென்றுணர்க, அற்றன்று, உயிர்கள் இரக்கத்தாற் பிறந்தா பிறந்தா னென்பிரேல், நும் புத்தன் பிறந்த ஞான்று தன் அன்னையின் வலது விலாப்புறத்தைப் பிளந்துகொண்டு பிறக்க, அதனால் அவனை ஈன்றாள் சில நாளெல்லாங் குற்றுயிராய்க் கிடந்து இறந்தாள் என நீவிரே கூறுதலின், தன் அன்னையின் துன்பத் திற்கும் சாவிற்கும் ஏதுவாய் வந்த அவன் இரக்கமுடையனாதல் யாங்ஙனம்? அதுவேயுமன்றி, நும் முனிவன் நரியும் புலியும் அரிமாவுமாகப் பிறந்தவழி வேறு மெல்விலங்குகளைக் கான்று தின்றானாதல் வேண்டுமன்றோ? அதனாலும் அவன் இரக்கமுடையானென்றலுஞ் செல்லாது; கொலை முதலியன கடிந்தானென்றலுஞ் செல்லாதென்றுணர்ந்துகொள்க.

ரல்லர், எம் புத்தமுனிவனோ இரக்கத்தாற்

அல்லதூஉம், ஐந்து கந்தங்களின் தொகையே உருவாவதல்லால், வேறுருவ மென்பதொன்றில்லை யென்பதே நுமது கோட் பாடாகலின், நுமது கடவுளுக்கு நீவிர் உரைக்கும் உருவமும் அத் தகையதே யாதல் வேண்டும்; இல்லாததோர் உருவத்தை அவன் பிறவிகடோறும் எடுப்பானென்றலும் பொருந்தாமையும் காண்க.

66

அதனாற்

இனி, னி, நும் புத்தமுனிவன் வழுவில்லாத பிடக நூல்களை அருளிச்செய்தனன் என்றலும் ஆகாது. அறமும் அறமல்லாதனவும் விரவிக் கிடக்கும் இவ் வுலகத்தே உயர்ந்த வ் அறங்களை ஆராய்ந்து பிரித்தெடுத்து ஒரு நூலாக அருளிச் செய்தற்குப் பலநாளும் ஒரு தொடர்பாக ஒருவற்கு உணர்வு நிகழ்தல்வேண்டும். மற்று நீவிரோ ஒரு கணத்து நிகழ்ந்த வுணர்வு அதன் பிற்கணத்து இல்லையாய் மாய்ந்தொழியப், பிற்பிற் கணத்துப் புதிது புதிதாக உணர்வு உணர்வு தோன்று மென்கின்றீர். நுமது கூற்றின்படி பார்க்குங்கால், நும்புத்த முனிவனுக்கு ஒரு தொடர்பான வுணர்வு இல்லை என்பதே பெறப்படுமாதலால், தொடர்பான வுணர்வு கொண்டன்றிச் செய்யப்படாத அறிவு நூல்களை அவன் அருளிச் செய்தா னென்றல் நுமது கோட்பாட்டுக்கு முற்றும் முரணாம்; அதுவேயுமன்றி, அவன் அந் நூல்களை அருளிச்செய்யத் தாடங்குதல் எழுத்துக்களால் ஆக்கப்பட்ட சொற்கள்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/159&oldid=1587606" இலிருந்து மீள்விக்கப்பட்டது