உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

1✰

127

அச்சொற்களால் ஆக்கப்பட்ட சொற்றொடர்களென்னும் கருவிகளைக் கொண்டன்றிப் பிறிதொருவாற்றானும் யலாமையினாலும், ஒரு கணத்துத் தொடங்கிய ஓர் எழுத்தோசை அதன் பிற்கணத்து இல்லையாய் ஒழிதல் வேண்டுமென்பதே நுமது கோளாகலின் அவ்வாற்றாற் பலவெழுத்துக்கள் தொடர்ந்த சொற்களும் பல சொற்கள் தொடர்ந்த சொற்றொடர்களும் அவற்றால் ஆகிய நூலும் உளவாதல் ஆகாமையினாலும் ஆகாமையினாலும் அவன் அந் நூல்களை க்கினான் என்னும் நுமதுரை பொருளில் கூற்றே போலும்!

66

இனி, உடம்பும் உயிரும் ஐவகைக் கந்தங்களின் தாகையேயல்லாமல், மற்று அவை வேறு தனிப் பொருள்கள் அல்லவென்றும், எல்லாப் பொருள்களுங்

கணங்கடோறும் மாய்ந்து மாய்ந்து புதியனவாய்த்

தான்றுவனவே யல்லது நிலைபேறாயுள்ளது எதுவும் ன்றென்றுங் கூறாநின்றீர். அவ்வாறு கணங்கடோறும் மாறுவது ல்பொருளான வெறும் பாழோ அல்லது உள்ளதொரு பொருடானோ என வினாயினார்க்கு, அஃது இல்பொரு ாருளேயா ளேயாமென உரைப்பிராயின், மயிரில்லாத திண்ணிய யாமை ஓட்டின்கண் மயிர்முளைத்ததென்றும், அம்மயிராற் கம்பலம் நெய்து மலடிபெற்ற மகன் போர்த்துக் கொண்டா னென்றுங் கூறும் முழுப் பொய்யுரைக்கே, நீர் கூறும் 'இல்லதன்கண் எல்லாந்தோன்றிக் கணங்கடோறும் மாயும்' எனும் போலியுரை ஒப்பாம். அற்றன்று, உள்ளதொரு பொருளே பருவடிவில் மாறுதலுற்றுக் கெட்டு மடியும், நுண்வடிவில் என்றும் உளதாம் என் றுரைக்குவிராயின் அது சைவராகிய எமது கோட்பாடாவதே யன்றிப் புத்தராகிய நுமது கோட்பாடன்று.

“அன்றாகவே, பருவடிவிற் கட்புலனாய் நிற்கும் இவ்வுடம்பிற்கே மாறுதலுங் கேடுமல்லாமல் இதற்கு முதலாய் நிற்கும் நுண்பொருளான மாயைக்கு அவை யில்லை யென்றுணர்விராக இன்னும் நீவிர் உரைக்குமாறே ஐவகைக் கந்தங்களின் தொகையே உயிராய், அவற்றின் வேறாகத் தாடர்ந்த உணர்விற்றாகிய உயிரென்பதொன்று இலதாயின், ‘நேற்று இந்நூலை எழுதத் துவங்கினவன் யானே, இன்றிதனை எழுதுகின்றவனும் யானே, நாளை இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/160&oldid=1587607" இலிருந்து மீள்விக்கப்பட்டது