உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

  • மறைமலையம் 22

எழுதுவோனும் யானே' என ஒருவற்கு ஒரு தொடர்பான வுணர்வு நிகழா தாகல்வேண்டும். மற்று, இவ்வுலகத்து நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் அவற்றைச் செய்யும் உயிர்களுக்கு ஒரு தொடர்பான வுணர்வு நிகழுமாறு பற்றி யன்றிப் பிறி தொருவாற்றானும் நிகழாமை எல்லார்க்குங் கண் கூடாய் அறியக்கிடத்தலின், இவ்வுண்மையொடு திறம்பி ஐவகைக் கந்தங்களின் வேறாய்த், தொடர்புபட்ட வுணர்வுடைய உயிர் என்பதொன் றில்லையென்றல் சிறிதும் அடாது. மேலும், ஐவகைக் கந்தங்களையன்றி வேறு உயிர் இல்லையாயின், ஒருவன் விழித்திருக்கையிலும் உறங்குகையிலும் அவன் ஒரு படித்தான வுணர்வுடையனாதல் வேண்டும். அவ்வாறன்றி விழித்திருக்கையிற் பாம்பைக் கண்டாலும் அஞ்சுமவன், உறங்குகையில் அஃது அவன் மேல் ஏறிச் சென்றாலும் அதனை யவன் உணராதிருத்தல் என்னை? விழிப்பினும் உறக்கத்தினும் அவ் வைவகைக் கந்தங்களும் உளவல்லோ? கணங் கடோறும் உணர்வு கெட்டுக் கெட்டுத் தோன்றுமென்பதே எமது கோட்பாடாகலின் விழிப்பின்கட் காணப்படும் உணர்வு உறக்கத்தின்கட் கெடுமாறுபற்றி எமக்கு ஆவதோர் இழுக்கில்லையென்பிரேல், விழிப்பின்கண் நிகழ்ந்த வுணர்வு கெட்டு உறக்கத்தின்கண் வேறொரு புத்துணர்வு தோன்று மாயினன்றே அது நுமது கோட்பாட்டிற்கு இசைந்ததாம்;

66

அவ்வாறன்றி விழிப்பின்கண் எல்லாவுணர்வு முடையனாயிருந்தான் ஒருவன் அயர்ந்த உறக்கத்தின்கண் அவ் வுணர்வு ஒரு சிறிதும் நிகழப்பெறாது கட்டை போலவுங் கற்போலவுந் தன்னைமறந்து கிடத்தல் கண்டாமாகலின், இது நும் மதத்தின் பொய்மையையே அறிவிப்பதன்றி அதற் கெவ்வாற்றானும் உதவிசெய்வதன்று. அதுவேயுமன்றி, நேற்றுப் பகல் விழித்திருந்தக் கால் ஒருவற்குண்டான உணர்வு நேற்றிரவு உறங்கச் சென்றக்காற் கெட்டு, இற்றைநாட்காலையிற் புதிது தோன்றுமென்றலே எமது கோட்டிபாட்டிற்கு ஒத்ததாம் என்பிரேல், நேற்றுப் பகல் ஓர் ஆடையை நெய்தற்குத் துவங்கினான் ஒரு கைக்கோளன் அஃது அன்றே முடிந் திடாமையின், அதனை அரைகுறையாய் விட்டுவைத்து, நேற்றிரவு துயிலச்சென்ற அளவானே அதனை நெய்தற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/161&oldid=1587608" இலிருந்து மீள்விக்கப்பட்டது