உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

6

129

குரிய எல்லா வுணர்வும் முற்றுங் கெடப்பெற்று, இற்றைக் காலையில் அத்துயில் நீங்கி எழுந்தவளவானே தன்னை இன் ன்னொன்று உணரும் உணர்வும் நேற்றுத் தான் நெய்தற்கு எடுத்து அரைகுறையாய் விட்டுவைத்த ஆடையைப் பற்றிய வுணர்வும் ஆகிய எல்லாம் முற்றும் இழந்து, இற்றைக்குத் தன்னை ஒரு குயவனாக நினைந்து குடமும் பானையும் வனையப் புகுதல்வேண்டும். நேற்றுத் தன்னை அரசனாய்க் கருதினானொருவன் இற்றைக்குத் தன்னை ஓர் ஏவற்காரனாகவும், இற்றைக்குக் கூலியாளாயிருப்பான் நாளைக்கு அரசனாகவும் இன்றைக்கு மக்கட் பிறவியிருப்பது நாளைக்குத் தன்னை ஒரு விலங்குப் பிறவியாகவும், நேற்றுப் பண்ணாயிருந்தது இன்று ஆணாகவும், இன்று ஆணா யிருப்பது நாளைப் பெண்ணாகவும் நேற்றுக் கல்லாயிருந்தது இன்று தன்னை ஒரு மரமாகவும், ன்று மரமா யிருப்பது நாளைத் தன்னை ஒரு மகனாகவுங் கருதிக் கொள்ளல் வேண்டும்!

66

திருவருட் செயலால் அத்தகைய பொய்ம் பாய்ம் மாற்ற வுணர்வும், அதுபற்றி வரக்கடவனாய பெருங் குழப்பங் களும் இலவாய், அறிவில்லாப் பொருள் முதற்கொண்டு ஓரறிவு ஈரறிவு மூவறிவு நாலறிவு ஐயறிவு ஆற்றிவு உடைய உயிர்கள் ய ஈறாக எல்லாம் ஒருமுறையுள் அடங்கித் தொடர்புபட்ட நிலையும் உணர்வும் வாய்ந்தனவாய் மிக வியத்தக்க ஒழுங்கோடும் நடைபெறக் காண்டல் கற்றார் முதற் கல்லாதார் ஈறான எத்திறத்தார்க்கும் ஒப்ப முடிந்ததாகலிற், சிறிது கற்று ஆராய்ச்சியுணர்வு இலராயினாரை மயக்கும் நும் போலிக் கொள்கை எவர்க்கும் எத்தகைய பயனுந் தருவதன்றென உணர்விராக. அற்றேல், நேற்று நிகழ்ந்த நிகழ்ச்சிகளிற் சிலவும், முந்திய திங்களில் நிகழ்ந்தவைகள் பலவும், முன்னாண்டுகளில் நிகழ்ந்தவற்றில் மிகச்சில தவிர ஏனையெல்லாமும் முற்பிறவி களில் நிகழ்ந்தவற்றிற் சிலதாமுமின்றி முற்றும் மறந் தொழிய வேறுவேறுணுர்வுகள் புதிய புதியவாய் நம்ம னோர்மாட்டெல்லாங் கண்கூடாய்க் காணப் படுதலின், எமது கொள்கை குற்றமாதல் யாங்ஙனமென்று உசாவுதிராயின், முன் நாளினும் முற்றிங்களினும், முன்னாண்டுகளினும், முற்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/162&oldid=1587609" இலிருந்து மீள்விக்கப்பட்டது