உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் 22

பிறவிகளினும் நிகழ்ந்த உணர்வு நிகழ்ச்சிகள் மாய்ந்து போயின வென்றல் உண்மையன்று; அவ்வுணர்வு நிகழ்ச்சிகள் அத்துணையும் ஒரு னையளவுங் கெட கடாமல்

மக்கள்

உள்ளத்தினும் ஏனையுயிர்களின் உள்ளங்களினும் நன்கு பதிந்தேயிருக்கின்றன. அல்லாக்கால், ஒரு சிலர் வேறு பலரினும் மிக்க நினைவுடையராய்க் கழிந்தகால நிகழ்ச்சிகளை யெல்லாம் நன்கு நினைவுகூர்தல் ஆகாது.

66

வன்னை

சிலர் நினைவின் மிக்கவராயும் பலர் அதிற் குறைந்தவராயுங் காணப்படுதற்கு ஏது யென்று நுணுகி நோக்கும்வழி, நினைவினாற்றல் மிகுந் துள்ளார்க்கு அவருள்ளத்தைப் பொதிந்த அறியாமை யிருள் விலகிநின்று அவர்தம் அறிவு சுடர்ந்து விளங்க இடந்தந் திருக்கின்ற தென்றும், நினைவினாற்றல் மிகக் குறைந் துள்ளார்க்கு அவரது உள்ளத்தைக் கவிந்த அறியாமையிருள் விலகி நில்லாமையின் அவரதறிவு அவ்வாறு விளங்குதற்கு இடம் இலதாயிற் றென்றும் அவ் வேறுபாட்டின் உண்மை புலப்படாநிற்கும். இவ் வேறுபாட்டினை ஓர் எடுத்துக்காட்டின் கண் வைத்துக் காட்டுதும்: ஈரம் ஏறிய விறகில் தீ உளதாயினும், அவ் ஈரம் உள்ளளவுந் அதன்கண் அத் தீ புலப்பட்டுத் தோன்றா தாகும்; மற்று அவ்வீரம் நீங்கியவழி அவ்விறகின்கண் அது விளங்கித் தோன்றும். ங்ஙனமே, அறியாமை யுள்ளளவும் உயிரின் அறிவிற் பதிந்த உணர்வு நிகழ்ச்சிகள் புலப்பட்டுத் தோன்றாவாகும்; அறியாமை நீங்கநீங்க அதன்கட் பதிந்த நிகழ்ச்சிகளெல்லாம் படிப்படியாய்ப் புலப்பட்டு நினைவிற்கு வரும். கல்விக்கழகம் ஒன்றிற் பயிலும் மாணாக்கர் பல்லோரும் ரேவகையான நினைவுடையராய் இல்லாமையும், அவருள் அறிவு மிகுதியும் உடையார் சிலர்க்கு நினைவு மிக்குத் தோன்றுதலும், முதலில் அறியாமையாற் கவரப்பட்டிருந்தாரும் பயிலுந்தோறும் பயிலுந்தோறும் அவ்வறியாமை சிறிது சிறிதாய்த் தேய அம்முறையே அவரது நினைவும்

படிப்படியாய் வலிவுற்று விளங்கித் தாங்கற்றபொருள்களை மறவாது நினைவு கூர்தலும் எமது சைவக்கொள்கையின் மெய்ம்மையை நன்கு நிலைபெறுத்தும். அதுவேயுமன்றித், தவத்தான் மனந் தூயராய் அறியாமை தேயப்பெற்ற அடியார் சிலர் முன்னும் முற்பிறவிகளினும் நிகழ்ந்தவற்றை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/163&oldid=1587610" இலிருந்து மீள்விக்கப்பட்டது