உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1 18

131

ருங்குணர்தலை நூல்களானும், கண்கூடானும் யிடையே அறிதுமாகலின் முன்நிகழ்ந்த உணர்வு நிகழ்ச்சி களெல்லாம் முற்றும் மாய்ந்துபோகப், பின் புத்துணர்ச்சிகள் உண்டாமென்னும் நுமதுரை உண்மை யன்றாதல் தெளியக் கடவிராக. இனி, மக்களல்லாத சிற்றுயிர்களும் தொடர்புபட்ட வுணர்வுடைமையினாலேதான் தத்தம் வாழ்நாள் எல்லை யளவும் உயிர்வாழ்கின்றன.

66

‘பறவைகள் தாம் முட்டையிடுங் காலம் வந்ததுணை யானே பலநாட்களும் முயன்று கூடுகள் கட்டுகின்றன. அக் கூடுகளைக் கட்டத்துவங்கிய நாள்முதல் அவை முடிவு பெறுங்காறும் அப் பறவைகள் தொடர்ந்த வுணர்வினவாய் அவைதம்மைச் செய்து முடித்தல் கண்டாமன்றே. அவை தமக்குத் தொடர்ந்த வுணர்வு இல்லையாயின், முன் நாட்களிற் கட்டத்துவங்கிய கூடுகளை மறந்து பின் நாட்களில் அவை வேறு பலவற்றைச் செய்யத் துவங்கித் துவங்கி ஒன்றையுஞ் செய்துமுடிக்க மாட்டாவாய் ஒழிதல் வேண்டும்; தாம் முன்நாளில் ஈன்ற குஞ்சுகளையும் மறந்து அவற்றிற்கு இரை தராதொழிதலும் வேண்டும். இவ்வாறெல்லாம் நுமது காள்கைப்படி ஒரு சிறிதாயினும் நடைபெறக் காணாமை யானும், உலகத்தின்கட் காணப்படும் எல்லா நிகழ்ச்சிகளும் எமது சைவக்கொள்கையின்படியே ஒரு தொடர்பாய் ஓர் ஒழுங்கின்கட் பட்டு நடைபெறக் காண்டலானும் ஒரு தொடர்பான வுணர்வுடைய உயிர் இல்லையெனும் நுமது கோள் உலக வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் ஒவ்வாத பொய்க் கோளாமென்று கடைப்பிடிப்பீராக.

66

"இனி, இதுகாறும் யாம் கூறியதுகொண்டே ஐந்து கந்தங்களின் வேறாய்த் தொடர்ந்த வுணர்வுடைய உயிர்கள் பல உளவென்பதும், தொடர்ந்த வுணர்வுடைய அவ்வுயிர் களின் உள்ளத்தைத் தொன்றுதொட்டே அறியாமை யென்னும் ஓரிருள் மறைத்துக்கொண்டிருத்தலின் அவற்றி னுணர்வுகள் முற்றும் விளங்காமல் இடையிடையே மறைந்து போகின்றன வென்பதும், அவ்வறியாமை நீக்கத்தின் பொருட் டாகவே இவ்வுடம்பும் இவ் வுடம்பின்கண் அமைந்த வியத்தகும் உறுப்புகளும், இவ்வுலகமும், இவ்வுலகத்துப் பல் பொருள் களும் எல்லாம்வல்ல சிவபெருமானால் இவ்வுயிர்கட்கு

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/164&oldid=1587611" இலிருந்து மீள்விக்கப்பட்டது