உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

  • மறைமலையம் 22

வழங்கப்பட்டன வென்பதும், இக்கருவிகளின் உதவிகொண்டு தமது அறியாமையைத் தொலைத்து உணர்வு முழுதும் விளங்கிச் சிவபிரான் றிருவடிப் பேரின்பத்தைப் பெறுதலே உயிர்கட்கு வீடுபேறாமல்லது உணர்வு முழுதுங்கெட்டு மீண்டும் பெரியதோர் அறியாமையிற் சென்று புகுவதாகிய நிருவாணமே' வீடுபேறாமெனக் கூறும் நுமது கோட்பாடு பெரிதும் பிழைபடுவதா மென்பதும் தாமே பெறப்படுதல் காண்க” என்று அடிகள் அருளிச்செய்தார்.

66

உயிரின்கட்

அதுகிடக்க உடம்பும் உலகமும் ஆகிய கருவிகளை கூட்டுதற்குச் சிவம் என்று ஒரு கடவுள் வேண்டிற்றென்னை? ஒருவன் உணர்வோடு செய்த செயலால் ‘வினை’ யென்பதொன்று உண்டாக, அவனும் அவ்வுணர்வும் அழிந்துபட்ட விடத்தும் அவ்வினை அழியாதாய் நின்று அவனுக்குப் பின்னும் பின்னும் பிறவிகளை உண்டாக்கும் என்றலே எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாம்,” என்று அப்புத்த முனிவன் இடைமறுத்துக் கூறப்பின்னும் அவனுரையை மறுத்து அடிகள் அருளிச் செய்தார்:

உண்டாதற்கு

வினை’

"பிறவி ஓர் ஏதுவா மென்பதே எல்லார்க்கும் உடன்பாடாவதன்றி, அவ் வினையே பிறவியை உண்டாக்கு மென்றல் எவர்க்கும் ஒத்ததன்று. கூலிக்கு ஊழியஞ் செய்தான் ஒருவனுக்கு, அவன் செய்த ஊழியமே அவனுக்குக் கூலியைக் கொடாது; அவன் செய்த ஊழியத்தின் இயல்பறிந்து அதனை அவற்குத் தருவானான தலைவன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படும்.

66

“அஃது எதனாலெனின், அவன் சய்த ஊழிய மாகிய வினை அறிவுடையதுமன்று, அவற்குரிய கூலி யினைத் தரவல்லதுமன்று, அதுபோல ஒரு பிறவியில் ஒருவன் ஆற்றிய வினையின் தொகுதியும் அறிவிலதாகலின், அவற்கு இனித் தரத்தக்க பிறவி இன்னதென அறியவும் மாட்டாது, அதனை அது தானே படைத்துக் கொடுக்கவும் வல்லதன்று, இனி முற்றுணர்வும் அதுபற்றி நிகழும் பேராற்றலும் சிற்றறிவினராய் உயிர்கட்கு இன்மை தெளியக்கிடந்த தொன்றாகலின், அவர் தாமே தமக்கு வேண்டும் பிறவியை அமைத்துக்கொள்ள மாட்டுவாரும் அல்லர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/165&oldid=1587612" இலிருந்து மீள்விக்கப்பட்டது