உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

133

இங்ஙனம் வினை தானே பிறவியைத் தராதாக, வினை செய்தாரும் அது தன்னைப் படைத்துக்கொள்ளாராக, அவ்வவர் வினைக்குத் தக்க பிறவியைத் தருதற்கு எல்லாவறிவும் எல்லா ஆற்றலும் முதன்மையும் ஒருங்கு உடை ய இறைவன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படு மென்க. மேலும், ஊழியஞ் செய்தான் ஒருவன் இருந்தே கூலியைப் பெறுதல் வேண்டுமாகலின், வினைசெய்த உயிர் அழியாதிருந்தே அதன் பயனான பிறவியைப் பெறுதல் வேண்டும்; அதனாலும் உயிர் இல்லையாக வினைவாற்றானும் ஒவ்வாதென் றுணர்க.'

""

“அற்றேல், நீர் கூறும் அவ் விறைவற்குரிய இலக் கணந்தான் என்னை?” என்று அப் புத்த முனிவன் வினாவ, அடிகள் அருளிச் செய்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/166&oldid=1587613" இலிருந்து மீள்விக்கப்பட்டது