உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

11. சைவ சமயக்

கோட்பாடுகளை விளக்கல்

"எம்மிறைவன் எண்ணிறந்த உயிர்கட்கு உடம்பு களைத் தந்து, அவை தம்மை எண்ணிறந்த உலகங்களில் வைத்து,. அவை தம்மை இயற்கையே பொதிந்த அறியாமையை நீக்கி அவைதமக்கு அறிவுச்சுடர் காளுத்தல் வேண்டும் பேரிரக்கமும் அருளும் உடையனாகலின், அவன் அவ்வுயிர்கள் எல்லாவற்றுள்ளும் அவ்வுலகங்கள் எல்லாவற்றுள்ளும் எள்ளும் எண்ணெயும்போற் கலந்து நிற்பனாவன்.

“நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்

66

எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.'

(திருச்சதகம்,46)

ங்ஙனம், அவ்வுயிர்களும் உலகங்களும் வேறு, தான் வேறு, என்று பிரித்துக்காணல் இயலாவாறு, அவை தம்மோடு ஒருங்கியைந்து அவையே தானாய் இரண்டற்று நிற்கு நிலையும், அங்ஙனம் நிற்பினும் சிற்றறிவினவாகிய உயிர்களினும் அறிவில்லனவாய் மாறுந் தன்மையவாகிய உலகங்களினும் வேறாந்தன்மை யுடைமையின் அவற்றின் வேறாய் ஒரு பெற்றியனாய் நிற்கும் உண்மை நிலையும் உடையனாம்.

66

"இருளை வெளியே இகபர மாகி இருந்தவனே.'

(நீத்தல் விண்ணப்பம்,17)

“ஈசனேநீ யல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும் பேசி னேன்ஓர் பேத மின்மை.'

(திருச்சதகம், 78)

(திருவெம்பாவை, 18)

‘பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்குஒளிசேர் விண்ணாகி இத்தனையும் வேறாகி;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/167&oldid=1587614" இலிருந்து மீள்விக்கப்பட்டது