உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

'போற்றிஇப் புவன நீர்தீக்

காலொடு வானம் ஆனாய்

போற்றிஎவ் வுயிர்க்கும் தோற்ற

மாகிநீ தோற்ற மில்லாய்

போற்றிஎல் லாவு யிர்க்கும்

1

135

ஈறாய்ஈ றின்மையானாய்

போற்றிஐம் புலன்கள் நின்னைப்

புணர்கிலாப் புணர்க்கை யனே.'

(திருச்சதகம்,70)

‘பித்தனே எல்லா வுயிருமாய்த் தழைத்துப்

பிழைத்து அவை அல்லையாய் நிற்கும். எத்தனே’

(பிடித்தபத்து, 8)

66

வான்கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர்

மண்கெடினுந்

தான்கெட்ட லின்றிச் சலிப்பு அறியாத்

தன்மையனுக்கு.'

(திருத்தேள்ளேனம், 18)

உயிர்களின் உ

உடம்பு

உலகத்துக் காணப்படும் களெல்லாம் ஆண் பெண் என்னும் இருகூற்றின்கட்படுதலின், அவ் விருவகை யுடம்புகளின் நிற்கும் உயிர்களும் அவ்வுடம்பு களோடொத்த ஆண்டன்மையும் பெண்டன்மையும் உடையனவேயாம் என்பது பெறுதும். பெறவே, இவ்வுயிர் கட்கெல்லாம் முதல் உயிராய் நிற்குங் கடவுளும் ஆணும் பெண்ணுமாகிய ஈருயிராய் அம்மையப்பராய் நிற்குமென உணர்ந்து இவ்வாறிருவகைப்பட்டு நிற்கும் இறைமுதற் பொருள்களுள், இறைவன் தன் இறைவியோடு பிரிப்பின்றி

ங்கியைந்து நிற்க, இறைவி உலகுயிர்களில் அவ்வாறு ஒருங்கியைந்து நிற்க இங்ஙனமே எல்லாப் பொருள்களும் உயிர்களும் அம்முழுமுதற் பொருளோடு கூடிநின்று ஆணும் பெண்ணுமாய்த் தொழிற்படா நிற்கின்றன வென் றறிவிராக. இங்ஙன மல்லாக்கால், ஆணும் பெண்ணுமாய் நின்று நடைபெறும் இவ்வுலகத்தின் இயல்பு வேறு எவ்வாற்றானும் விளங்கா தென்றறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/168&oldid=1587615" இலிருந்து மீள்விக்கப்பட்டது