உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் 22

“உடையாள் உன்றன் நடுவிருக்கும்

உடையாள் நடுவுள் நீயிருத்தி

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால்,

(கோயின்மூத்த திருப்பதிகம், 1)

‘பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே.

அண்ணல் தன் ஒருபால்

(திருப்பள்ளியெழுச்சி, 8)

அவள் அத்தனாம் மகனாம்.' (திருச்சிற்றம்பலக் கோவையார், 112) யாவையும் ஆம் ஏகத்து ஒருவன்.' (திருச்சிற்றம்பலக் கோவையார், 71)

66

னி, உலகங்களிலும் உயிர்களிலும் மறைந்து நின்று அவை தம்மை இயங்கும் இறைவன் அதுபற்றி அருவமாய் நிற்பனாகலின், அவனை அன்பராயினாரன்றி வேறெவரும் உணரவுங் காணவும் வல்லுநரல்லர்; அங்ஙனம் அன்பரல் லாரால் அறியப்படானாயினும், அன்பராயினர்க்குத் தனது அருளாலாய உருவத்திரு மேனியிற் றோன்றிப் பேரருள் புரிதலும் உடையன். எனவே, அவற்கு அருவம் உருவம் என்னும் இருவகைத் திருமேனியும் உளவாம். அவன் தனது அருளால் மேற்கொள்ளும் உருவத்திருமேனி, நம்மனோர் வினைவழியே ஒரு தாயின் கருப்பையுட் புகுந்தெடுக்கும் ஊனுடம்பின் உருப்போல்வதன்று; அ ஃதவன் நினைந்தவளவானே அருளிற் றோன்றி அருளில் மறைவதாகும்; அதனால், அவற்கு எஞ்ஞான்றுந் தாய் தந்தையர் இலரெனத் தெளிமின்!

‘யாவராயினும் அன்பரன்றி

அறியொணாமலர்ச் சோதியான்.'

‘மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்.'

'பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாம்அறியாச் சேவேறு சேவடி'

(சென்னிப்பத்து,1)

(திருவெண்பா.9)

(திருக்கோத்தும்பி,1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/169&oldid=1587616" இலிருந்து மீள்விக்கப்பட்டது