உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

ஆவா அரிஅயன் இந்திரன்

வானோர்க்கு அரிய சிவன்

1

137

வாவா என்று என்னையும் பூதலத்தே

வலித் தாண்டு கொண்டான்.'

(திருத்தெள்ளேணம், 7)

‘பத்தி வலையிற் படுவோன் காண்க.

(திருவண்டப்பகுதி, 42)

அருவாய் உருவமும் ஆனபிரான்.'

(திருத்தெள்ளேணம், 2)

'உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே.'

(திருப்பூவல்லி, 6)

‘செந்தழல்புரை திருமேனியுங் காட்டி.’

(திருப்பள்ளி யெழுச்சி, 8)

தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே.'

(திருச்சதகம், 42)

'மற்றும் யாவர்க்குந்

66

தந்தையாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்.'

(திருச்சதகம், 47)

னி, அன்பராயினார்க்கு அருள்செய்தற் பொருட்டு எம்மிறைவன் எடுக்குந் திருவுருவம் தீயினோடு ஒப்ப தாகும்; அதனால், அனற் பிழம்பையே எம் ஐயனுக்கு ஒரு திருமேனியாகவும் அறிவுநூல்கள் கூறாநிற்கும். அற்றேல், உலகின்கட் காணப்படும் எல்லாப் பொருள்களையும் விடுத்துத், தீயை இறைவற்கொரு திருமேனியாகக் கூறுவது என்னை யென்பிரேல், மண் புனல் அனல் கால் வெளி என்னும் ஐம்பெரும் பகுப்பிலும், உயிரிலும் எல்லாப் பொருள்களும் அடங்கும்; இவைதம்முட் காற்றும் வெளியும் உயிரும் கட்புலனாகாதவை யாகலின், அவை உருவத்திருமேனிக்கு ஏற்றன ஆகா; எஞ்சிய மண் புனல் அனல் என்பவ வற்றில் மண்ணும் நீருங் கையாற் பற்றப்படும் பருப் பொருளேயாக இறைவன் மேற்கொள்ளும் அருளுருவோ அங்ஙனங் கையாற் பற்றப்படும் பருப்பொருள் அன்றாகலானும், அவையிரண்டுந் தோன்றியபடியே கிடப்பனவல்லால் இறைவனுருப்போல் தோன்றியவுடன் மறையுந் தன்மைய அல்லவாகலானும் அவ்விரண்டும் இறைவனுருவத்திருமேனியோடு ஒப்பனவல்ல. மற்று, அனற் கொழுந்தோ கையாற் பற்றப் படாமையானும், கையாற் பற்றப்படா தாயினுங் கட்புலனுக்கு விளங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/170&oldid=1587617" இலிருந்து மீள்விக்கப்பட்டது