உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் 22

தோன்றும் உருவுடைமையானும், உடன்தோன்றி உடன் மறையுந் தன்மைத் தாகலானும் அஃதொன்றுமே இறைவனது உருவத்திருமேனியோடு ஒப்பதூஉம் அதற்கு இடமாவதூஉம்

ஆம்.

அதுவேயுமன்றி, இறைவன் இயற்கையொளியுடை யனாய் உயிர்களின் அகவிருளாகிய அறியாமையை நீக்கி அறிவொளி தோற்றுவித்தல்போலத், தீக்கொழுந்தும் இயற்கை யொளியுடைத்தாய்க் கண்ணை மறைக்கும் புறவிருளையோட்டி எவற்றையும் விளங்கச் செய்தலானும், இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் என்னுந் தொழில்களைச் செய்தல்போலத், தீயும் ஓரெல்லையுள் நின்று உயிரோடுகூடிய உடம்புகளைத் தோற்றி நிலைபெறுவித்துத் தன்னெல்லை கடந்தவழி அவற்றை யழித்து உயிர்கட்கு அறிவுவிளங்கச் செய்த லானும், கட்புலனாய்த் தோன்றும் இறைவன் உடனே மறைந்து எங்கும் அருவமாய் நிற்றல் போலக் கட்புலனாய்த் தோன்றுந் தீயும் மறைந்தவழி எங்கும் உளதாகலானும், இறைவன் தான் தூயனாய் நின்றே தூயவல்லாப் பொருள்களோடு விரவிய வழியும் தான் அவற்றாற் பற்றப்படானாய் அவற்றின் தூவாமை நீக்கித் தூய்மை செய்தல்போல, தீயும் தான் தூயதாய் நின்றே தூயவல்லாப் பொருள்களோடு கூடியக் காலும் தான் அவற்றால் அழுக்கடையாது அவற்றின் அழுக்கையெல்லாம் எரித்துத் தூய சாம்பராக்குதலானும், அருவும் உருவும் ஒளியும் ஒருங்குடைய இறைவனைப் போலவே அனற் கொழுந்தும் அருவும் உருவும் ஒளியும் ஒருங்குடையதாய் நிற்றலானும் கட்புனலாய்த்தோன்றுந் தீயே கட்புலனாகா இறைவனது அருளுருவத் திருமேனி விளக்கத்திற்கு இடமாமென்று தெளியற்பாற்று. து பற்றியன்றே, உலகத்தின்கண்

ஆ ண்

டாண்டிருந்த பண்டைமக்கள் எல்லாரும் தீவடிவினும், தீயின் கூறான ஞாயிறு திங்கள் வடிவினும் வைத்து இறைவனை வழிபட்டு வரலாயினாரென்க. இன்னும் ஆண்டன் மைக்கு அடையாளமான கடுந்தன்மையுடைய தீ சிவந்த நிறம் உடையதாதல் பற்றியே ஆண் உருவினனாகிய சிவபிரானுக்குச் சிவந்த திருமேனியும். அத் தீயின்கண் அடங்கித் தோன்றுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/171&oldid=1587618" இலிருந்து மீள்விக்கப்பட்டது