உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

1

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் குளிர்ந்த நீலநிற முடையதாதல்

நீர்வடிவு

139

பற்றியே

இறைவனாகிய சிவபிரான்கண் அடங்கி மிளிரும் மெல்லிய அருட்பெரும் பெண்டன்மையுடைய இறைவிக்கு நீலநிறத் திருமேனியும் நூல்களுட் கூறப்படுவவாயின: உலகத்துள்ள எல்லா உயிர்களும், பொருள்களும், பொருட்டன்மைகளும், நிறங்களும், ஆண், பெண், தீ, நீர், வெப்பந் தட்பம், செம்மை நீலம் என இரு பெரும் வகுப்பில் அடங்கும் இயல்பினை நுனித் தாராயுங்கால், இவை யெல்லாவற்றிற்கும் முதலாய் நிற்கும் இறைவனும் இறைவியும் அவ்விரு வகையியல்பு முடையராம் உண்மை தானே விளங்காநிற்கும். இனித், தீயின்கண் இறைவன் முனைத்து விளங்குதல் பற்றியே அத் தீப்பிழம்பின் வடிவாகத் திரண்டு நீண்டு குவிந்த சிவலிங்கத் திருவடிவம் திருக்கோயில் கடோறும் நிறுத்தி வழிபாடு செய்யப்படுகின்ற தெனவும், சிவமாகிய நெருப்பிற் படிந்த அடியார்க்கு அவரைப் பற்றிய மும்மலங்களும் அதனால் எரிக்கப்பட்டுத் தூயவாய் அவரை வருத்தாதொழிய அவரும் முற்றுந் தூயராகிச் சிவபிரான் திருவருளிற் றோய்ந்து பேரின்பம் நுகர்ந்திருத்தலைத் தெரிக்கும் அடையாளமாகவே ஆவின் சாணத்தை நெருப்பிலிட்டுச் சாம்பராக்கி மூன்று வரியாக நெற்றிமேலிட்டும் மெய்யெங்கும் பூசியும் வெள்ளிய தூய ஆனேற்றினை அச் சிவலிங்கவடிவின் முன்வைத்தும் ஆன்றோரெல்லாம் பண்டுதொட்டுத் திருக்கோயில் வழிபாடு ஆற்றி வருகின்றன ரெனவும் உணர்ந்து கொள்க.

66

“சுடர்கின்ற கோலம்

தீயேயென மன்னுசிற்றம் பலவர்.

وو

(திருச்சிற்றம்பலக் கோவையார், 370)

“செந்தழல்புரை திருமேனியுங்காட்டி;”

(திருப்பள்ளி யெழுச்சி, 8)

எமக்கு வெளிப் படா யென்ன

வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்.'

(அருட்பத்து, 4)

'சோதியாய்த் தோன்றும் உருவமே

அருவாம் ஒருவனே.'

(கோயிற்றிருப்பதிகம், 9)

‘அரத்தமேனியாய்.’

(திருச்சதகம், 93)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/172&oldid=1587619" இலிருந்து மீள்விக்கப்பட்டது