மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
―
1✰
147
நிலைபெறுதற்கும் நீங்குதற்கும் முதல் ஏதுவாய் நடை பெறும் நெஞ்சப்பையின் அசைவு அந் நெஞ்சப்பையைத் தமக்கு உரிமையாவுடைய உயிர்கட்கே ஒரு சிறிதும் விளங்காமை யானும், விளங்காததோடு அதனை அசைக்கும் ஆற்றலும் அவை தமக்கு இல்லாமையானும், எல்லா ஆற்றலும் உடைய ஓர் அறிவுப்பொருள் அசைத்தாலன்றி அவ்வசைவு நடைபெறுதல் ருவாற்றானும் ஆகாமையானும், எல்லாம்வல்ல இறைவனே அந் நெஞ்சப்பைகடோறும் முனைத்து விளங்கிநின்று அவை தம்மை இயக்கி, அவ்வாற்றால் உயிர்கள் உடம்புகளில் நிலை பெறநின்று அறிவுந்தொழிலும் உடையராய் போதர உதவி செய்து வருகின்றான் என்று தெளிமின்! இங்ஙனம் எல்லா வுயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையின்கட் சிவபிரான் முனைத்துநின்று ஆடி அதனை அதனை ஆட்டுவிக்கும் அருள் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து மக்களெல்லாரும் அதன்கட்டமது உணர்வினை யொடுக்கி வழிபடுதற்கு எளிதாம் பொருட்டே, புறத்தே இந் நிலமடந்தைக்கு நெஞ்சத்தாமரை போல் வயங்குவதாகிய இத் தில்லை அம்பலத்தே அவ் வாண்டவன் அருட்கூத்தின் நிலை எம்முன்னோரால் அமைத்துக் காட்டப் பட்ட தென்றுணர்க. அகத்தே உடம்பிலும் புறத்தே உலகத் திலும் எம்மையன் இங்ஙனந் திருக்கூத்து நிகழ்த்தி அவை தம்மை இயக்குதல் பற்றியே அவன் ‘அம்பலக் கூத்தன்' எனவும் பெயர் பெறுவன் என்க. இங்ஙனம் எம்மிறைவன் இயற்றும் அருட்கூத்து உயிர்கள் உய்தற் பொருட்டேயன்றித் தன் பொருட்டு அன் றென்பதூஉம் உணரற்பாற்று. இவையே எமது சைவசமய வுண்மையென்று அறிவிராக!”
‘உருகுதலைச் சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே
பெருகுதலைச் சென்று நின்றேன்.'(திருச்சிற்றம்பலக் கோவையார், 104) 'சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணங் குறியொன்றும் இல்லாத கூத்தன்றன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.'
(அச்சோப்பதிகம், 2)
‘பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன் இவன்என என்னை ஆக்குவித்துப் பேராமே