உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் 22

எம்பிரான் தம்பிரானாம்

திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன

அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே'

(அச்சப்பத்து, 1,2)

'வேண்டேன் புகழ்வேண்டேன்

செல்வம்வேண்டேன் மண்ணும் விண்ணும்

வேண்டேன் பிறப்பிறப்புச் சிவம்

வேண்டார்தமை நாளுந் தீண்டேன்'

(உயிருண்ணிப்பத்து, 7)

‘எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே’

(திருவேசறவு, 4)

வல்வினையேன் றன்னை

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பதுவாயிற் குடிலை

......நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி’

(சிவபுராணம். 50-58)

'உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக்கடல்'

(திருத்தெள்ளேணம், 17)

‘புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்’

66

(திருத்தோணோக்கம், 6)

இனி உடம்போடு கூடி யியங்கும் எல்லா உயிர்களும் விழித்திருக்கையிலும் உறங்குகையிலும் அவை தம் உடம்புள் ளிருந்து ஓவாது அசைவது நெஞ்சப்பை ஒன்றுமேயாகும். இவ்வசைவு அவ்வுடம்புகளிலிருந்து பலவகை முயற்சிகளைப் புரியும் உயிர்கள் தம்மால் நடத்தப்படுவதன்று. தம்முடம்புக்குள் ளிருக்கும் நெஞ்சப்பையின் அமைவும், அஃது எங்ஙனம் நடைபெறுகின்ற தென அதன் ஏதுவும் உணரமாட்டாத உயிர்கள் அதனை அங்ஙனம் ஓவாது அசைக்கவல்லவாதல் எவ்வாறு கைகூடும்? அந் நெஞ்சப்பை அசையுங்காறும் உயிர்கள் உடம்புகள் நிலைபெறுதலும், அதன் அசைவு நின்ற வுடனே உயிர் உடம்பை விட்டு நீங்குதலுங் கண்கூடாய்

அறியக்கிடந்த உண்மைகளாம். இவ்வாறு உயிர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/179&oldid=1587626" இலிருந்து மீள்விக்கப்பட்டது